Sunday, November 24, 2013

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தும் DTEd முடிவுகள் வெளியாகாததால் மாணவர்கள் வேதனை

ஆசிரியர் பயிற்சி முடிவுகள் ஆறு மாதமாக வெளியாகாததால் மாணவர்கள் வேதனை அடைந்துள்ளனர். சமச்சீர்கல்வி திட்டம் கொண்டு வந்த பிறகும் சிலபஸ் மாற்றாமல் பழைய பாடதிட்டத்தின் படியே தொடர்ந்து பாடம் நடத்தி வருவதாக கூறினர்.
 இடைநிலை கல்வி தற்போது செயல்முறை கல்வித்திட்டம், செயல்வழிக்
கற்றல் ஆகியவை மாற்றப்பட்டு தற்போது சமச்சீர் கல்வி திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால் ஆசிரியர் பயிற்சி இயக்குநரும், பாடத்திட்டம் மாற்றாமல் பழைய பாடத்திட்டத்தினை அமல்படுத்தி வருகின்றனர். இதனால் டீச்சிங், பிராக்டீஸ் செல்லும் பொழுது படித்த பாடத்திற்கும் மாணவர்களிடம் பாடம் நடத்துவதற்கும் குழப்பம் ஏற்படுகிறது என ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் கூறுகின்றனர். மேலும் ஜூன் மாதம் நடந்த தேர்வுக்கு இன்று வரை ரிசல்ட் வெளியிடவில்லை. இதில் சில மாணவர்கள் டி.ஆர்.பி. நடத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். (இரண்டாம் ஆண்டு ஆசிரியர் பயிற்சி படிப்பவர்கள், பி.எட்.அட்மிஷன் ஆனவர்களும் டி.ஆர்.பி எக்ஸாம் எழுதலாம்) ஆசிரியர் பயிற்சி முடிவு வராததால் கூடுதல் மார்க் இருந்தும் வேலை கிடைக்காமல் போய்விடுமோ என கவலையில்
ஆழ்ந்துள்ளனர். மேலும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களை முறைப்படுத்த
வேண்டும் என விரிவுரையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment