Thursday, December 26, 2013

10ம் வகுப்பு தேர்வு எழுதுவோர் பட்டியல் 27க்குள் அனுப்ப உத்தரவு

இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வு எழுத உள்ள மாணவர்கள் பற்றிய பட்டியல்களை 27ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் தேர்வுத்
துறைக்கு அனுப்ப வேண்டும் என்று அரசுத் தேர்வுகள் துறை உத்தரவிட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு படிக்கும்
மாணவர்களுக்கு மார்ச் 26ம் தேதி
பொதுத் தேர்வு தொடங்குகிறது.
முன்னதாக ஒவ்வொரு பள்ளியில்
இருந்தும் தேர்வுத்
துறைக்கு மாணவர்கள் பற்றிய
விவரங்கள் பெறப்படும். இந்த ஆண்டு அந்த
விவரங்கள் அனைத்தும், ஆன்லைன் மூலம்
பெற தேர்வுத்
துறை ஏற்பாடு செய்துள்ளது.
தமிழகத்தில் மொத்தம் உள்ள 6500 அரசுப்
பள்ளிகள், 3200 தனியார் பள்ளிகள் மூலம்
பத்தாம் வகுப்பு தேர்வு எழுத
உள்ளவர்களின் பெயர், போட்டோ, முகவரி,
தந்தை பெயர், உள்ளிட்ட
விவரங்களை அந்தந்த
பள்ளி தலைமை ஆசிரியர்கள் பெற்று,
ஆன்லைன் மூலம் தேர்வுத்
துறைக்கு அனுப்ப வேண்டும்
என்று தேர்வுத்
துறை ஏற்கெனவே அறிவித்து
இருந்தது.
அதன்படி அனைத்து பள்ளி தலைமை
ஆசிரியர்களும்
பட்டியல்களை தயாரித்து வைத்துள்ளனர்
. தற்போது பிளஸ் 2 வகுப்பு பட்டியல்
அனுப்பும் பணி நடப்பதால், பத்தாம்
வகுப்பு மாணவர்கள் பட்டியல் 27ம்
தேதி ஆன்லைனில்
அனுப்பி வைக்கப்படும்.
தேர்வுத் துறை அதைப் பெற்று, ஸ்கேன்
செய்து ஒரு பட்டியல் தயார் செய்யும்.
பின்னர் அந்த பட்டியல் மீண்டும் அந்தந்த
பள்ளிகளுக்கு அனுப்பி வைப்பார்கள்.
அதில் உள்ள குறைகளையும்
சுட்டிக்காட்டி இருப்பார்கள். இதற்கான
ஆய்வுக் கூட்டம் அனைத்து மாவட்ட
முதன்மைக் கல்வி அலுவலர்கள்
தலைமையில் சென்னையில் நடக்கிறது.
பிளஸ் 2 வகுப்புக்கான திருத்திய
பட்டியல்கள் மீண்டும்
தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட
உள்ளது.அந்த பட்டியலில்
தெரிவிக்கப்பட்டுள்ள
குறைகளை தலைமை ஆசிரியர்கள்
திருத்தம் செய்து அனுப்புவார்கள்.
இதற்கு பிறகு இறுதிப் பட்டியல்
தயாரிப்பார்கள். பின்னர்
மாணவர்களுக்கான தேர்வுக் கட்டணம்,
இறுதி விவரம் ஆகியவை ஆன் லைன்
மூலம் தேர்வுத்
துறைக்கு வந்து சேரும்.

No comments:

Post a Comment