Tuesday, December 10, 2013

பிளஸ் 2, 10 ம்வகுப்பு மாணவர்களுக்கு ஓவியஆசிரியர் மூலம் பயிற்சி

பிளஸ் 2, 10 ம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவியல் பாடத்தில் உள்ள படங்களை வரைய, ஓவிய ஆசிரியர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பிளஸ் 2 மாணவர்களுக்கு, டிச.,10, 10 ம் வகுப்பு மாணவர்களுக்கு, டிச.,12 பிளஸ்2 மாணவர்களுக்கும் அரையாண்டு தேர்வு துவங்க உள்ளது.
இத்தேர்வு ரிசல்ட் அடிப்படையில அரசு பொதுத்தேர்வுக்கு மாணவர்களை தயார்ப்படுத்த வேண்டுமென, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
விடைத்தாளில் உள்ள குறைகளை மாணவர்களிடம் சுட்டிகாட்ட
வேண்டும். மதிப்பெண்கள் அடிப்படையில், மாணவர்களை தரம் பிரித்து,
பாடவாரியாக சிறப்பு பயிற்சி அளிக்க வேண்டும்."புளு பிரின்ட்' படி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். தினமும் ஐந்து, ஐந்து
வினாக்களாக பிரித்து படிப்பதற்கு ஊக்கப்படுத்தவேண்டும். வரலாறு, புவியியல் பாடங்களுக்கு வரைப்பட பயிற்சி அளிக்கவேண்டும். மாணவர்களை சிறு, சிறு குழுக்களாக பிரித்து, ஒவ்வொரு குழுவிற்கும்,
பொறுப்பாசிரியர்களை நியமிக்க வேண்டும். மந்தமான மாணவர்களுக்கு மாலைநேர சிறப்பு பயிற்சி அளிக்க வேண்டும். அறிவியல் பாடத்தில் உள்ள
படங்களை ஓவிய ஆசிரியர் மூலம் பயிற்சி அளிக்க வேண்டுமென,
உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment