Monday, December 23, 2013

கல்லூரி ஆசிரியர்களுக்கான ‘‘நெட்’’ என்றதகுதித்தேர்வு 2 லட்சம் பேர் எழுதினார்கள்

பல்கலைக்கழக மானியக்குழுவும், அறிவியல் மற்றும் தொழில்
ஆராய்ச்சி குழுவும் சேர்ந்து இளநிலை ஆராய்ச்சியாளர் மற்றும்
உதவி பேராசிரியர்களை பணிஅமர்த்துவதற்கான தகுதித்தேர்வு (சிஎஸ்ஐஆர்–நெட்) அகில இந்திய அளவில் நேற்று நடைபெற்றது.
காலை 9 மணிமுதல் 12 மணி வரை ஒரு தேர்வும்,
பிற்பகல் 2 மணி முதல் மாலை 5
மணிவரை மற்றொரு தேர்வும் நடைபெற்றது. இதில்
பி.இ., பி.டெக்., பி.பார்மா, எம்.பி.பி.எஸ்.,
எம்.எஸ்சி. முதலிய பட்டம் பெற்றவர்கள்
எழுதினார்கள்.
சென்னையில் அடையாறு எம்.ஜி.ஆர்.–
ஜானகி கலை அறிவியல் கல்லூரி, ஐ.ஐ.டி.
நிறுவனம், வேளச்சேரி குருநானக் கல்லூரி,
செல்லம்மாள் மகளிர் கல்லூரி உள்ளிட்ட இடங்களில்
தேர்வு நடைபெற்றது. இது தவிர காரைக்குடியிலும்
நடைபெற்றது. இந்த தேர்வை சென்னையில் 17
ஆயிரத்து 600 பேர் எழுதினார்கள். காரைக்குடியில்
4 ஆயிரத்து 500 பேர் எழுதினார்கள்.
இந்தியா முழுவதும் மொத்தம் 2 லட்சத்து 10 ஆயிரம்
பேர் எழுதி உள்ளனர்.

No comments:

Post a Comment