Monday, December 16, 2013

தலைமை ஆசிரியர் பணிக்கான கவுன்சிலிங்கை ரத்து செய்ய ஆசிரியர்கள் வலியுறுத்தல்

தலைமை ஆசிரியர் பணிக்கான கவுன்சிலிங்கை ரத்து செய்து முறைப்படி நடத்த வேண்டும்,' என பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் வட்டார வளமைய மேற்பார்வையாளர்களுக்கு இடமாறுதலாகவும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வாகவும் நேற்று கவுன்சிலிங் நடந்தது.
அவசரமாக நடந்த இக்கவுன்சிலிங்
குறித்து பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநில
தலைவர் இளங்கோவன் கூறியதாவது:
ஆசிரியர்
கவுன்சிலிங்கை முறைப்படி முன்னுரிமை
பட்டியல் வெளியிட்டு, 15 நாட்கள்
கழித்து நடத்த வேண்டும். ஆனால் முன்தினம்
இரவு 7 மணிக்கு இமெயில் மூலம்கூட
தெரிவிக்காமல், சம்பந்தப்பட்டோருக்கு மட்டும்
"திடீரென' அறிவித்து கவுன்சிலிங்
நடத்தி இடமாறுதல் வழங்கப்பட்டுள்ளது.
இப்படி அவசரமாக நடத்துவதற்கான
பின்னணி என்ன?248
பேருக்கு பதவி உயர்வு மூலம் வழங்குவதாக
அறிவித்தும் மாலை 5 மணி வரை யாருக்கும்
வழங்கவில்லை. கல்வித்துறையில் இதுபோல
ஒருபோதும் நடந்ததில்லை. முறைகேடான
இக்கவுன்சிலிங்கை ரத்து செய்ய வேண்டும்,
என்றார்.

No comments:

Post a Comment