Saturday, December 21, 2013

தேசிய நல்லாசிரியர் விருது: தேர்வுக் குழுவுக்கு "கிடுக்கிபிடி"

தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யும் தேர்வுக் குழு மற்றும்
ஆசிரியர்களுக்கு பல்வேறு உத்தரவுகளை பள்ளிக் கல்வித் துறை பிறப்பித்துள்ளது.

இதுதொடர்பாக உத்தரவில்
தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் 2013ம்
ஆண்டுக்குரிய தேசிய அளவிலான நல்லாசிரியர்
விருது பெற தகுதி வாய்ந்த
ஆசிரியர்களை தேர்வு செய்ய தேர்வுக்
குழு அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட
தேர்வுக்குழு உறுப்பினர்களாக
தேர்வு செய்யப்படுவர்கள் தூய்மையான
கல்வி பணியாற்றுவர்களாகவும், எந்தவித
புகாருக்கும் ஒழுங்கு நடவடிக்கைக்கும்
உட்பட்பட்டவராக இருக்க கூடாது.
விருதுக்கு தகுதியானவர்கள் பணிபுரியும்
பள்ளிகளை பார்வையிட்டு அதன் அடிப்படையில்
மார்க் வழங்கி தேசிய விருதுக்கு பரிந்துரை செய்ய
வேண்டும். இதனை மீறி செயல்படும் அலுவலர்கள்
மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
தேர்வு குழு மூலம்
ஒரு கல்வி மாவட்டத்திற்கு ஒருவர் வீதம்
தேர்வு செய்து அவர்களின் சார்பில்
கருத்துருக்களை தயாரித்து பள்ளி கல்வி இயக்கக
இணை இயக்குனர் அலுவலகத்திற்கு வரும் 31ம்
தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
இப்பணி மிகவும் முக்கியத்துவம்
வாய்ந்தது என்பதால் எந்தவித புகாருக்கும்
இடமின்றி சார் நிலை அலுவலர்கள் இதன்
மீது தனிக் கவனம் செலுத்தி மிகுந்த
ஈடுபாட்டுடன் செயல்பட வேண்டும்.
விருதுக்கு தகுதியான
ஆசிரியர்களை அலுவலர்கள் தாங்களே இனம்
கண்டு உரிய கருத்துருக்களை தயார்
செய்து பரிந்துரைக்க வேண்டும்.
ஆசிரியர்களிடமிருந்து கருத்துருக்களை பெற்று
பரிந்துரை செய்வதை தவிர்க்க வேண்டும்.
2011-12ம் கல்வி ஆண்டில்
அல்லது அதற்கு முன்னர் டாக்டர் ராதாகிருஷ்ணன்
விருது பெற்ற ஆசிரியர்கள் மட்டுமே தேசிய
நல்லாசிரியர் விருதுக்கு தகுதியுடையவராவார்.
தேர்வு செய்யப்படும் ஆசிரியர்கள் தூய்மையான
கல்வி பணியாற்றுபவர்களாகவும், எந்தவித
ஒழுங்கு நடவடிக்கைக்கும் உட்பட்டவராக இருக்க
கூடாது.
இதனை மீறி செயல்படும் அலுவலர்கள் மீது கடும்
நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அந்த
உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment