Monday, December 09, 2013

அனைத்து நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கும்சிறப்பு ஆசிரியரை நியமிக்கணும் :ஆசிரியர்கூட்டணி தீர்மானம

திருச்சி மாவட்ட தமிழ்நாடு ஆசிரியர்  கூட்டணி கிளையின் சார்பில், மாவட்ட பொதுக்குழு கூட்டம் யூனியன் துவக்கப்பள்ளி வளாகத்தில் நடந்தது.
கூட்டத்திற்கு, மாவட்ட துணை செயலாளர்  விஜயகுமார் வரவேற்றார். மாவட்ட  துணைத்தலைவர்  முத்துக்கண்ணு தலைமை வகித்தார். மாவட்ட
செயலாளர் நாகராஜன், மாநில  துணைத்தலைவர் பாலகிருஷ்ணன் ஆகியோர்
சிறப்பு விருந்தினராக  பங்கேற்று கோரிக்கைகள்  குறித்து விளக்கி பேசினார்.
கூட்டத்தில், தமிழக கல்வித்துறையில் முதல்,  இரண்டாம்  வகுப்பு மாணவர்களை அட்டைக்கல்வியின்  அடிப்படையில் ஆறு குழுக்களாக
வைத்து நடக்கும் கற்பித்தல் முறையை தமிழக  அரசு மறுபரிசீலனை செய்ய தமிழக  அரசை கேட்டுக்கொள்வது.  மாணவர்களுக்கு வழங்கப்படும், 14
வகை இலவச பொருட்களை பள்ளிக்கு எடுத்துச்  செல்வதில்  தலைமை ஆசிரியர்களுக்கு பணி சரிமமும், பொருளாதார சிரமும் ஏற்படுகிறது.
இதை பரிசீலனை செய்ய தமிழக அரசை கேட்டுக்கொள்வது. ஆறு, ஏழு, எட்டாம் வகுப்பில், 100 மாணவர்களுக்கு சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்படுவது போல், அனைத்து நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கும்
சிறப்பு ஆசிரியர்களை நியமிக்க கேட்டுக்கொள்வது. தொடக்கக் கல்வி துறையில் பணி நியமனம் மாநில அளவில் இருக்கும்போது, பதவி உயர்வு மட்டும் ஒன்றிய அளவில் இருப்பதை மாற்றி மாநில அளவில் பதவி முன்னுரிமை பட்டியல் தயார் செய்து உயர்நிலை, மேல்நிலை கல்வியில்
உள்ள நடைமுறை போல செயல்படுத்தி தர தமிழக அரசை கேட்டுக்கொள்வது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், முசிறி, உப்பிலியபுரம், லால்குடி, தா.பேட்டை, வையப்பட்டி, மண்ணச்சநல்லூர்
பகுதிகளை சேர்ந்த வட்டாரச் செயலாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். உறுப்பினர் குமார் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment