Thursday, December 12, 2013

ஆசிரியர்களுக்கு தொழில் வரியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்: அனைத்து ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை!

ஆசிரியர்களுக்கு வருமானவரி மற்றும் தொழில்வரி ஆகிவற்றிலிருந்து முற்றிலும் விலக்க அளிக்க வேண்டும் என அனைத்து ஆசிரியர்
கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
 சிதம்பரத்தில் விடுதலைச் சிறுத்தைகள்
கட்சி அனைத்து ஆசிரியர்
கூட்டமைப்பு கலந்தாய்வுக் கூட்டம்
திங்கள்கிழமை நடைபெற்றது. மாநில இணைச்
செயலாளர் ரா.காவியச்செல்வன்
தலைமை வகித்தார். மு.ஆ.தமிழ்க்குமரன்
வரவேற்றார். பழனிவேல்ராஜன், சுபாஷ்,
அ.ஜெயசீலன் ஆகியோர்
முன்னிலை வகித்தனர். மாநிலத் தலைவர்
ப.பெருஞ்சித்தன், பொறியாளர்
அ.கலியபெருமாள், ஜெ.பாலசுப்பிரமணியன்
ஆகியோர் பங்கேற்று பேசினர். ரா.ஜெயசீலன்
நன்றி கூறினார்.
தீர்மானங்கள்: ஆசிரியர்களின் ஓய்வுபெறும்
வயதை 60-ஆக உயர்த்த வேண்டும்,
வருவாய்த்துறையிலிருந்து, ஆதிதிராவிட
நலத்துறையை தனியாக
பிரித்து தனி இயக்குநரகமாக அமைக்க
வேண்டும், பழைய
ஓய்வூதியத்திட்டத்தை நடைமுறைப்படுத்த
வேண்டும், ஆறாவது ஊதியக்குழுவில் உள்ள
ஊதிய முரண்பாடுகளை உடன் களைய
வேண்டும்.

No comments:

Post a Comment