Monday, December 16, 2013

அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டம் சார்பில் பள்ளி மேலாண்மை குழுக்களுக்கான பயிற்சி முகாம்

அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டம் சார்பில் பள்ளி மேலாண்மைக்
குழு உறுப்பினர்களுக்கான 2 நாள் பயிற்சி முகாம் நடைபெற இருக்கிறது.
பள்ளி மேலாண்மை குழுவில் உறுப்பினர்களாக தலைமை ஆசிரியர், 9,10 ஆகிய வகுப்புகளுக்கு பாடம் கற்பிக்கும் ஆசிரியர்கள், பெற்றோர்
ஆசிரியர் சங்கத்தின் உறுப்பினர் மற்றும் அந்தந்த பகுதியில் ஊராட்சியின் உறுப்பினர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் பள்ளியின் நிர்வாகத்தை திறமையாக நடத்த வேண்டும். அதன் அடிப்படையிலேயே இரண்டு நாள்
பயிற்சி முகாம் நடைபெற இருக்கிறது. இதில் ஒவ்வொரு மையங்களிலும் தலா 50 பேர் வீதம் பங்கேற்க இருக்கிறார்கள். இம்முகாமில் மேலாண்மை குழுவினரின் பங்கு குறித்தும், கிராமங்களில் பள்ளியை மேம்படுத்துதல்,
உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல், பள்ளிக்குத்
தேவையானவைகளை வெளியில் பொதுமக்கள் ஆர்வலர்களிடம்
இருந்து பெற்று பூர்த்தி செய்தல் போன்றவைகள் குறித்து விரிவாக பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது. இப்பயிற்சி முகாமிற்கு கருத்தாளர்களாக
தலைமையாசிரியர்கள், மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிலையத்தின்
முதுநிலை விரிவுரையாளர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் ஆகியோர் பயிற்சி அளிக்க இருக்கிறார்கள் .

No comments:

Post a Comment