Thursday, December 26, 2013

வடமாநிலங்களில் கடும் குளிர் : உ.பி.,யில் பள்ளிகளுக்கு லீவு

வடமாநிலங்களில், கடும் குளிர் நிலவுவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது.
உ.பி.,யில்
பள்ளிகளுக்கு, ஜன., 10ம் தேதி வரை,
விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.
முந்தைய சில ஆண்டுகளை விட, இந்த
ஆண்டு, வடமாநிலங்களில், கடும் குளிர்
வீசுவதாக, வானிலை ஆய்வாளர்கள்
கூறியுள்ளனர். குறிப்பாக, உத்தர பிரதேசம்,
ராஜஸ்தான், பஞ்சாப், அரியானா, ஜம்மு காஷ்மீர்,
இமாச்சல பிரதேச மாநிலங்களில், குளிரால்,
மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும்
பாதிக்கப்பட்டு உள்ளது.
ராஜஸ்தானின் மவுன்ட் அபுவில், 2.4
டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவியது.
ஜம்மு காஷ்மீரில், பல இடங்களில் மைனஸ்
டிகிரி வெப்ப நிலை இருந்தது. கடும்
குளிருடன், மூடுபனி,
பனிப்பொழிவு போன்றவையும் அதிக அளவில்
இருப்பதால், விமானம், ரயில்,
சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.
தெருக்களில் மக்கள் நடமாட்டம், மிகக்
குறைவாகவே இருந்தது. உத்தர பிரதேசத்தில்,
கடும் குளிர் வீசி வருவதால், வரும், ஜனவரி,
10ம் தேதி வரை, பள்ளிகளை மூட,
சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த, முதல்வர்,
அகிலேஷ் யாதவ் தலைமையிலான
அரசு உத்தரவிட்டு உள்ளது. இதன்படி,
நர்சரி முதல், எட்டாம் வகுப்பு வரையிலான
மாணவர்களுக்கு, கிறிஸ்துமஸ் விடுமுறை,
ஜன., 10ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment