Friday, January 10, 2014

அரசு பள்ளி தேர்ச்சியை அதிகரிக்க திருச்சியில் 7 மணி நேரம் ஆய்வு :அமைச்சர், செயலாளர் பங்கேற்பு

அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க திருச்சியில் அமைச்சர், முதன்மை செயலாளர் தலைமையில் ஏழு மணி நேரம் ஆய்வு கூட்டம் நடந்தது.

அரசு பொதுத் தேர்வில்
தேர்ச்சி சதவீதத்தை உயர்த்துவது குறித்து திருச்சி
மண்டல அளவிலான
பள்ளி கல்வி துறை அலுவலர்கள்,
தலைமை ஆசிரியர்கள் ஆய்வுக் கூட்டம்
நேற்றுமுன்தினம் திருச்சி தெப்பக்குளம் பிஷப்
ஹீபர் பள்ளியில் நடந்தது.
கடந்த ஆண்டு நடந்த அரசு பொதுத் தேர்வில் 70
சதவீதத்திற்கும் குறைவாக தேர்ச்சி பெற்ற 177
உயர்நிலைப் பள்ளி, 73 மேல்நிலைப் பள்ளி என
மொத்தம் 250 அரசு மற்றும் ஆதிதிராவிடர்
பள்ளி தலைமை ஆசிரியர்கள் உள்பட 444 பேர்
பங்கேற்றனர். பள்ளி கல்வித் துறை இயக்குனர்
ராமேஸ்வர முருகன் வரவேற்றார்.
பள்ளி கல்வித் துறை அமைச்சர்
வீரமணி கூட்டத்தில் பங்கேற்று, திருச்சி. தஞ்சை,
திருவாரூர், நாகை, பெரம்பலூர், அரியலூர் ஆகிய 6
மாவட்டங்களில் கடந்த ஆண்டு நடந்த
எஸ்.எஸ்.எல்.ஸி., ப்ளஸ் 2 பொதுத் தேர்வுகளில் 100
சதவீத தேர்ச்சி பெற்ற 53 அரசுப் பள்ளிகளின்
தலைமை ஆசிரியர்களுக்கு கேடயம் வழங்கினார்.
கூட்டத்தில் கல்வி துறை முதன்மை செயலாளர்
சபிதா பேசுகையில், "" கோவை, நெல்லை,
மதுரை மண்டலங்களை தொடர்ந்து திருச்சியில்
ஆய்வுக் கூட்டம் நடக்கிறது. கடந்த ஆண்டு நடந்த
அரசு பொதுத் தேர்வில் திருச்சி மாவட்டத்தில் 12
பள்ளிகள், பெரம்பலூர் மாவட்டத்தில் 11 பள்ளிகள்,
அரியலூரில் 52 பள்ளிகள், திருவாரூரில் 57
பள்ளிகள், தஞ்சாவூரில் 76 பள்ளிகள், நாகையில் 80
பள்ளிகள் 70 சதவீதத்துக்கு குறைவான
தேர்ச்சி பெற்றுள்ளது. குறைவாக தேர்ச்சி பெற்ற
பள்ளிகளின், தேர்ச்சி சதவீதத்தை உயர்த்த
நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது,''
என்றார்.
இதன் பின்னர் பள்ளிகளின்
தலைமை ஆசிரியர்களிடம்
தனித்தனியே சபீதா ஆய்வு மேற்கொண்டார்.
"தேர்ச்சி சதவீதம் குறைவுக்கு என்ன காரணம்?. இந்த
ஆண்டு இதை உயர்த்த மேற்கொள்ளப்பட்டுள்ள
நடவடிக்கை' குறித்து கேட்டார். "பெரும்பாலான
தலைமை ஆசிரியர்கள் சிறப்பு வகுப்புகள்
நடத்தப்பட்டு தேர்ச்சி சதவீதம் உயர்த்தப்படும்' என,
தெரிவித்தனர்.
காலை 10 மணிக்கு கூட்டம் துவங்கும் என
அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் காலை 11.45
மணிக்கு துவங்கிய ஆய்வு கூட்டம்,
உணவு இடைவேளைக்கு பிறகும் மாலை 6.30
மணி வரை நடந்தது. அது வரை கூட்ட
நடவடிக்கைகளை கவனித்து வந்த அமைச்சர்
வீரமணி பேசினார். இரவு 7 மணிக்கு மேல் கூட்டம்
முடிந்தது. இந்த வகையில் நேற்றுமுன்தினம் 7
மணி நேரம் ஆய்வு கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் அமைச்சர் வீரமணி பேசுகையில்,
""திருச்சி மண்டலத்தில் 70 சதவீதத்திற்கும்
குறைவாக தேர்ச்சி 250 பள்ளிகள் இந்த
ஆண்டு நூறு சதவீத தேர்ச்சியை அடைய வேண்டும்
என்ற மன உறுதியுடன் செயல்பட வேண்டும்,''
என்றார்.
மேயர் ஜெயா, அனைவருக்கும் கல்வி இயக்க மாநில
திட்ட இயக்குனர் பூஜா குல்கர்னி, மூன்றாம் பருவ
பாடப் புத்தகம்
விநியோகிப்பது குறித்து தமிழ்நாடு பாடநூல்
கழக மேலாண்மை இயக்குனர் மகேஸ்வரன் ஆகியோர்
பேசினர்.

No comments:

Post a Comment