Saturday, January 18, 2014

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு தேதியை தள்ளி வைக்க கோரிக்கை

ஆசிரியர் தேர்வு வாரியம் இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களுக்கும்,
பட்டப்படிப்புடன் பி.எட். படித்தவர்களுக்கும்
ஆசிரியர் தகுதி தேர்வை நடத்தியது.
6 லட்சத்து 50 ஆயிரம் பேர்
தேர்வு எழுதினார்கள். அதற்கான விடைகளும்,
பின்னர் முடிவுகளும் வெளியிடப்பட்டது.
ஆனால் விடைகள் சில
கேள்விகளுக்கு சரி இல்லை என்று எதிர்ப்பு
வந்ததால், நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில்
விடைத்தாள்கள் மறுமதிப்பீடு செய்யப்பட்டு,
கடந்த 12–ந் தேதி முடிவுகள்
வெளியிடப்பட்டன. சான்றிதழ் சரிபார்த்தல் 20–
ந் தேதி முதல் 27–ந் தேதி வரை நடக்கிறது.
இதில் 20–ந் தேதி சான்றிதழ்
சரிபார்த்தலுக்கு செல்பவர்களுக்கு மட்டும்
சிக்கல் எழுந்துள்ளதாக, சென்னையை சேர்ந்த
சில தேர்வர்கள் கூறி உள்ளனர்.
அவர்கள் கூறும்போது, ‘‘தமிழ் வழியில்
படித்துள்ளதால் நிறைய
சான்றிதழ்களுக்கு ஜெராக்ஸ் எடுத்து உரிய
அதிகாரிகளின்
கையெழுத்து வாங்கவேண்டி உள்ளது.
வெளி மாவட்டங்களைச் சேர்ந்த நாங்கள்
சென்னையில் உறவினர் வீடுகளில்
தங்கி இருக்கிறோம். ஆனால்
தேர்வு முடிவு வெளியிட்ட நாளில் இருந்து,
17–ந் தேதி தவிர மற்ற நாட்கள்
தொடர்ந்து அரசு விடுமுறைதான் என்பதால்,
சான்றிதழ் சரிபார்ப்பு தேதியை 2
நாட்களாவது தள்ளி வைக்க வேண்டும்’’
என்று கோரிக்கை விடுத்தனர்.

No comments:

Post a Comment