Monday, January 27, 2014

"பணி நிரவல்' இன்றி பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்கக்கூடாது : ஆசிரியர் சங்கத்தினர் கோரிக்கை

"பணி நிரவல்' கவுன்சிலிங் நடத்தாமல் புதிய பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்பதை தவிர்க்க வேண்டும் என,
ஆசிரியர் சங்கத்தினர்
கோரிக்கை விடுத்துள்ளனர். அரசு,
அரசு உதவிபெறும் உயர்,
மேல்நிலைப்பள்ளிகளில் 40:1 என்ற
விகிதாச்சார அடிப்படையில்
பாடவாரி ஆசிரியர்கள்
நியமிக்கப்படுகின்றனர். இந்த
விதியை மீறி கூடுதலாக இருந்ததால்
பணிநிரவல் கவுன்சிலிங் மூலம்
காலியிடங்களுக்கு மாறுதல்
வழங்குவது வழக்கம். 2012ல் நடந்த
பணி நிரவலில் ஏராளமான ஆசிரியர்கள்
மாவட்டத்திற்குள் மாற்றினர். இதன் பின்னர்,
புதியதாக 15 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள்
நியமிக்கப்பட்டனர். இதன் மூலம் சில பாடங்கள்
தவிர, பெரும்பாலான பாடங்களுக்கு 40:1
விகிதாச்சாரத்தை தாண்டி சில இடங்களில்
அதிகமான ஆசிரியர்கள்
தற்போது பணிபுரிகின்றனர். இந்நிலையில்,
மேலும் 15 ஆயிரம் புதிய
ஆசிரியர்களை நியமிப்பதாக
அரசு அறிவித்துள்ளது. தகுதித்தேர்வு தாள்-2
தேர்வான 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட
பட்டதாரி ஆசிரியர்களுக்கு சான்றிதழ்
சரிபார்க்கும் பணி நடக்கும்
நிலையில்,இவர்களில்
பலருக்கு பணி வாய்ப்பு கிடைக்கும் என,
நம்புகின்றனர். இதன் மூலம் சில உயர்,
மேல்நிலைப் பள்ளிகளில் ஒரே பாடத்திற்குரிய
ஆசிரியர்கள் எண்ணிக்கை 40:1 விட
அதிகரிக்க வாய்ப்புள்ளது. பணி நிரவல்
இன்றி, 2012 பணி நிரவலுக்கு பின் சேர்ந்த
ஆசிரியர்கள் தங்களுக்கு சாதகமான
இடத்திற்கு மாறுதல் பெற வாய்ப்பு இராது.
பட்டதாரி ஆசிரியர் சங்கங்கள் கூறுகையில்,
"பணிநிரவல்
என்பது பற்றாக்குறை பள்ளிக்கு, அதிகமுள்ள
பள்ளிகளில் இருந்து ஜூனியர்
நிலை ஆசிரியர்களை மாற்றம் செய்வது.
இதில்,சிலருக்கு சாதகமான பள்ளி கிடைக்க
வாய்ப்புள்ளது. 2012ல் பணி நிரவலுக்கு பின்,
நியமித்த 15 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களில்
சிலருக்கு பணிநிரவலில் மாறுதல்
கிடைக்கும் நிலை உள்ளது.
ஆனாலும், 15 ஆயிரம் புதிய
ஆசிரியர்களை நியமிக்கும் சூழலால்
ஏற்கனவே பணியில் சேர்ந்தவர்களின்
பணிநிரவல் வாய்ப்பு பறிபோகும்.
ஒவ்வொரு மாவட்டத்திலும், 20 முதல் 30 பேர்
வரை பணிநிரவலில் மாறுதல் பெற
வாய்ப்புள்ளது. புதிய ஆசிரியர்கள்
நியமனத்திற்கு முன், ஏற்கனவே பணியில்
உள்ள
பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நிரவல்,பதவி உயர்வு கவுன்சிலிங்
நடத்த வேண்டும், என்றனர்.-

No comments:

Post a Comment