Sunday, January 19, 2014

முதுகலை ஆசிரியர் நியமனத்தேர்வு,ஆசிரியர் தகுதித்தேர்வு வழக்குகள்...

ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட
முக்கிய விடைகளை எதிர்த்து வழக்குகள்
தொடரப்பட்டன.
இதனால், சான்றிதழ்
சரிபார்ப்பு நடைபெறுவது தாமதமானது.
இந்தநிலையில், நீதிமன்ற
உத்தரவின்படி இரண்டாம் தாள் விடைத்தாள்
அனைத்தையும், மறு மதிப்பீடு செய்து, புதிய
தேர்வு முடிவை, டி.ஆர்.பி., வெளியிட்டது.
ஆசிரியர் தகுதித் தேர்வுகளில்,
தேர்ச்சி பெற்ற பட்டதாரி மற்றும்
இடைநிலை ஆசிரியர்களுக்கான, சான்றிதழ்
சரிபார்ப்பு, ஜன., 20 முதல் 27 வரை, அந்தந்த
மாவட்டங்களில் நடக்கிறது.தற்போதைய
சான்றிதல்
சரிபார்ப்பு சென்னை உயர்நீதி மன்ற ரிட்
மனுக்கள் மீது வழங்கப்படும் இறுதித்
தீர்ப்புக்கு உட்பட்டது என ஆசிரியர்
தேர்வு வாரியம்அறிவித்துள்ளது என்பது
குறிப்பிடத்தக்கது ..
( The provisional list and the outcome of this certificate
verification exercise is subject to final orders in various
writ petitions on answer keys filed before the Hon’ble
High Court of Madras. -TRB)
இதற்கிடையில் முதுகலை ஆசிரியர்
நியமனத்தேர்வு,ஆசிரியர்
தகுதித்தேர்வு குறித்து சென்னை
உயர்நீதிமன்றத்தில்
ஏற்கனவே தாக்கல்செய்யப்பட்டு
ஒத்திவக்கப்பட்டுள்ள ஏராளமான வழக்குகள்
(250 க்கும்
மேற்பட்டவழக்குகள் )ஒருங்கிணைக்கப்பட்டு
நீதியரசர் ஆர் சுப்பையா முன்னிலையில்
(20.01.14) பிற்பகல் 2
மணிக்கு விசாரணைக்கு வருகின்றன.
( WRIT PETITIONS RELATING TO AWARD THE MARK
AND PERMIT THE PETITIONER'S PARTICIPATE IN THE
CERTIFICATE VERIFICATION FOR THE POST OF
P.G.ASSISTANT / B.T.ASSISTANT /GRADUATE
ASSISTANT / SECONDARY GRADE TEACHER - YEAR
2013 - HEARD ON MONDAYTHE 20TH DAY OF
JANUARY 2013 AT 2.15 P.M BY HON'BLE MR JUSTICE
R.SUBBIAH )
ஏற்கனவே ஆசிரியர்
தகுதித்தேர்வு குறித்து சென்னை உயர்நீதி
மன்ற மதுரை கிளையில் ஏற்கனவே 60 க்கும்
மேற்பட்ட வழக்குகள் நீதியரசர் எம்.எம்
சுந்தரேஸ் முன்னிலையில் 10.01.14
அன்று விசாரணைக்கு வந்தபொழுது TET
தேர்வினை எதிர்த்து தாக்கல் செய்த
மனுக்கள்மீது நீதியரசர்
நாகமுத்து ஏற்கனவே அளித்த
தீர்ப்பு இம்மனுதாரர்களுக்கும் பொருந்தும்.
எனக்கூறி அனைத்து மனுக்களையும்
தள்ளுபடி செய்தார் .சென்னை உயர்
நீதிமன்றமும் அதனடிப்படையில்
இவ்வழக்குகள் அனைத்தும் ஒரே நாளில்
முடிவு செய்யுமா?
அல்லது விசாரணை தொடருமா என்பது
அனைவரின் எதிர்பார்பாக உள்ளது.

No comments:

Post a Comment