Wednesday, February 26, 2014

நாளை 27.02.2014 மத்திய அமைச்சரவைக் கூட்டம்: 50% அகவிலைப்படி அடிப்படை ஊதியத்துடன் இணைப்பு, 10% அகவிலைப்படி உயர்வு, ஓய்வு பெறும் வயது 62 ஆக அதிகரிப்பு போன்ற அறிவிப்புகள் வெளியாகும் என எதிபார்ப்பு

மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 62ஆக உயர்த்தப்படும் என தகவல்
வெளியாகியுள்ளது.
இதற்கான
அறிவிப்பு விரைவில் வெளியாகும்
என தெரிகிறது. மார்ச் 1ந்
தேதியிலிருந்து இந்த
உயர்வு அமலுக்கு வரும் என மத்திய
அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தற்போது 60ஆக உள்ள ஓய்வு பெறும்
வயதில் 2 வருடங்கள் அதிகரிக்கும் இந்த
முடிவு வியாழன் அன்று நடக்க உள்ள
மத்திய அமைச்சரவை கூட்டத்தில்
எடுக்கப்படும் என
எதிர்பார்க்கப்படுகிறது. ஓய்வு பெறும்
வயதை உயர்த்துவது பற்றிய
முழுமையான விவரங்கள் 7வது ஊதியக்
குழு பரிந்துரையில் இடம்பெறும்
என்று தெரிவித்துள்ள இந்த வட்டாரங்கள்
அது வரை ஊதியம் நிர்ணயம் உள்ளிட்ட
விவகாரங்களில் இடைக்கால நிவாரணம்
வழங்கப்படும் என்றும் தெரிவித்தனர்.
இந்த ஆண்டு பிப்ரவரி 28ந்
தேதியோடு ஓய்வு பெறும்
ஊழியர்களுக்கு இந்த
வயது உயர்வு பொருந்தாது என்றும்
தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே வியாழன் அன்று நடக்க
உள்ள மத்திய அமைச்சரவை கூட்டத்தில்
ஊழியர்களின் அகவிலைப்படியை 10%
அதிகரிக்கவும் முடிவு எடுக்கப்படும்
என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை தொடர்ந்து 100%ஆக உயரும்
அகவிலைப்படியில் 50%
அடிப்படை ஊதியத்துடன்
இணைக்கப்படும் என தெரிகிறது.
இதனால் 50 லட்சம் மத்திய
அரசு ஊழியர்களும், 30 லட்சம்
ஓய்வூதியர்களும் பயன் பெறுவார்கள்.
தேர்தல்
விதிகளை பாதிக்காது வகையில்
மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கும்
முன்னேர இந்த 2 முடிவுகளும்
வெளியாகும் என தெரிகிறது.

No comments:

Post a Comment