Saturday, February 22, 2014

விருதுநகர் மாவட்டத்தில் பிளஸ்2 தேர்வு தொடர்பாக அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கான கூட்டம்

பிளஸ்2 தேர்வு விடைத்தாள்களில் மாணவ, மாணவிகளின் விவரம் மற்றும் புகைப்படத்துடன் இடம் பெற்ற முகப்புத்தாள் இணைக்கும் பணி மேற்கொள்வது தொடர்பாக தலைமையாசிரியர்களுக்கான கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 

    விருதுநகர் கேவிஎஸ் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடந்த கூட்டத்திற்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வி.ஜெயக்குமார் தலைமை வகித்தார். கே.வி.எஸ் மேல்நிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் சந்திரமோகன் முன்னிலை வகித்தார். மாவட்டக் கல்வி அலுவலர் ராமச்சந்திரன் புதிய நடைமுறை பின்பற்றுவது குறித்து விளக்கமாக எடுத்துரைத்தார்.
    நிகழாண்டு முதல் ஆள்மாறாட்டங்களை முற்றிலுமாக தடுக்கும் வகையிலும், விரைவாக தேர்வு முடிவுகளை வெளியிடும் வகையில் புதிய நடைமுறை பின்பற்றப்படுகிறது. அவ்வகையில் விடைத்தாள்களில் முகப்பு பகுதியில் மாணவ, மாணவிகளின் பெயர், பிறந்த தேதி, பள்ளி, தேர்வு மையம் மற்றும் புகைப்படம் ஆகியவை அச்சிடப்பட்டு, கணிப்பொறி மூலம் மட்டும் கண்டறியப்படும் மறைமுக எண்ணுடன் மூன்று பகுதிகள் இடம் பெற்றிருக்கும்.
     இதில் மாணவர் புகைப்படம் ஒட்டப்பட்ட எ பகுதியை தேர்வு மையத்திலும், பி பகுதியை விடைத்தாள் திருத்தும் மையத்திலும் அடிக்குச்சி வைத்து கிழிக்கப்படும். அதையடுத்து விடைத்தாளோடு சி என்ற ஓரப்பகுதி மட்டும் இடம் பெற்றிருக்கும். இந்த விவரங்கள் அடங்கிய முகப்புத் தாளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் மூலம் அந்தந்த பள்ளிகளில் விநியோகம் செய்யப்பட்டுள்ள நிலையில் தலைமையாசிரியர்களின் மேற்பார்வையில் ஆசிரியர்கள் இப்பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
     விடைத்தாள்களில் முக்கியமாக உயிரியல் பாட பிரிவில் உள்பகுதியாக  தாவரவியல் பாடம் இடம் பெற்றிருப்பதால் படம் வரைவதற்காக கூடுதலான தாள்களையும் இணைத்து தைக்க வேண்டும். இதேபோல், வணிகக் கணித பாடத்தில் கிராப் சீட்டும், வரலாறு பாடத்திற்கு இந்தியா மேப் வரைபடம், புவியியல் பாடத்திற்கு உலக வரைபடம் இணைத்து கூடுதலாக தைக்க வேண்டும் என விளக்கமாக  எடுத்துரைத்தனர்.
    இப்பணியை அடுத்து வரும் இரண்டு நாள்களில் விடைத்தாளில் முகப்பு தாள் வைத்து தைக்கும் பணியை முடித்து தேர்விற்கு தயராக வேண்டும் என  தலைமையாசிரிகளை கேட்டுக் கொண்டனர். இதில், மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், தேர்வு கண்காணிப்பாளர்கள், தேர்வுக்கூட மேற்பார்வையாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment