Thursday, February 20, 2014

பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கு 3 நாட்கள் பயிற்சி

திருச்சி புத்தூர், பிஷப் ஹீபர் மேல்நிலைப்பள்ளி, இ.ஆர்.
மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றில்
அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில்
மேலாண்மைக்குழு உறுப்பி னர்
பயிற்சிக்காக மாவட்ட அளவிலான
கருத்தாளர் பயிற்சி கடந்த 18ம்
தேதி துவங்கியது. பயிற்சி 3 நாள்
நடக்கிறது.

இந்த பயிற்சியில் ஆசி ரிய
பயிற்றுநர்கள், ஆசிரியர்கள் மற்றும்
தொண்டு நிறுவன உறுப்பினர்கள் உள்பட
270 பேர் கலந்து கொண்டனர்.
பயிற்சியை திருச்சி மாவட்ட உதவி திட்ட
அலுவலர் சரவ ணன் துவக்கி வைத்தார்.
பயிற்சியில் இலவச கட்டாயக்
கல்வி உரிமைச் சட்டத்தில் உள்ள
பிரிவுகளில் புதிய
பள்ளி துவங்குதல், பள்ளி யின்
உட்கட்டமைப்பு வசதி கள்,
குழந்தைகளுக்கான சிறப்பு வசதிகள்,
பள்ளி மேலா ண்மைக் குழு மற்றும்
உறுப்பினர்களின் செயல்பாடுகள்,
உள்ளாட்சி நிர்வாகத் தின் கடமைகள்,
குழந்தை உரிமை பாது காப்பு
போன்றவற்றை கருத்தாளர்கள்
விவாதிக்க உள்ளனர். மேலும்
பிப்ரவரி 24 முதல் மார்ச் 1ம்
தேதி வரை அனைத்து வட்டார
வளமையங்களுக்கு உட்பட்ட
குறுவளமைய அளவில்
பள்ளி மேலாண்மைக்
குழு உறுப்பினர்களுக்கு 3 நாட் கள்
பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

No comments:

Post a Comment