Monday, February 10, 2014

பள்ளி மாணவர்களுக்கு பயன்படாத இலவச "அட்லஸ்'

ஆசிரியர்களிடம் ஆர்வம் இல்லாததால்,
பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக
வழங்கப்பட்ட நில வரைப்பட நூல் (அட்லஸ்) பயன்படுத்தப்படாமல் உள்ளது.
அரசு மற்றும் உதவிபெறும்
பள்ளிகளில், 6 முதல் 10ம் வகுப்பு வரை பயிலும்
55.67 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு, இலவசமாக
"அட்லஸ்' வழங்கப்பட்டது. இதன்மூலம் அட்சரேகை,
தீர்க்கரேகை, நிலவரைப்படம் அளவைகள், திசைகள்,
புவியியல் கலைச்சொற்கள், வரைப்படம் வகைகள்,
நேரம் கணக்கிடல் போன்றவற்றை தெரிந்து கொள்ள
முடியும்.இவற்றை கற்பிப்பதற்கு, சமூக
அறிவியல் ஆசிரியர்களுக்கு பயிற்சியும்
அளிக்கப்பட்டன. ஆனால், இந்த
"அட்லஸ்'யை பயன்படுத்தி,
மாணவர்களுக்கு கற்பிக்க, ஆசிரியர்கள் ஆர்வம்
காட்டுவதில்லை.இதுகுறித்து வந்த
புகாரை அடுத்து, பள்ளிகளில் "அட்லஸ்'
பயன்பாடு குறித்து,
ஆய்வுசெய்து அறிக்கை அனுப்புமாறு, மாவட்ட
கல்வி அலுவலர்கள், மாவட்ட தொடக்கக்
கல்வி அலுவலர்களுக்கு, மாநில கல்வியியல்
ஆராய்ச்சி பயிற்சி நிலையம் உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment