Friday, February 21, 2014

கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் நாடாளுமன்ற தேர்தலில் பாடம் புகட்டுவோம்தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம் எச்சரிக்கை

கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால்,
நாடாளுமன்ற தேர்தலில் தமிழக அரசுக்கு பாடம் புகட்டுவோம்

என்று தொடக்கப்பள்ளி ஆசிரியர்
மன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்
மன்றத்தின் மாநில
பொது செயலாளர் மீனாட்சிசுந்தரம்
வெளியிட்டுள்ள அறிக்கையில்
கூறியிருப்பதாவது:
தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் 6
சங்கங்கள் இணைந்த டிட்டோஜாக்
சார்பில் வலியுறுத்தப்பட்ட 7 அம்ச
கோரிக்கைகளை தமிழக
அரசு நிறைவேற்ற கோரி வரும் 22ம்
தேதி வேலூரிலும், 23ம்
தேதி கடலூரிலும் , மார்ச் 1ம்
தேதி காலை மதுரையிலும்,
மாலை திருச்சியிலும், மார்ச் 2ம்
தேதி கோவையிலும் ஆசிரியர்
மன்றத்தின் சார்பில்
வேலைநிறுத்த போராட்டம் நடைபெற
உள்ளது. இதில் மாநில, மாவட்ட,
ஒன்றிய, நகர பொறுப்பாளர்களும்,
உறுப்பினர்களும் தவறாமல்
கலந்து கொள்ள வேண்டும்.
மேலும் மார்ச் 6ம் தேதி நடைபெற
உள்ள ஒருநாள் அடையாள
வேலைநிறுத்த போராட்டத்திலும்
ஆசிரியர் மன்றத்தினர் முழுஅளவில்
கலந்து கொள்ள வேண்டும். தமிழக
அரசு மார்ச் 6ம் தேதிக்குள் 7 அம்ச
கோரிக்கைகளை
நிறைவேற்றாவிட்டால் டிட்டோஜாக்
பொதுக்குழு கூடி அடுத்தகட்டமாக
காலவரையற்ற
போராட்டத்தை அறிவிக்க வேண்டும்
என்று ஆசிரியர் மன்றம்
டிட்டோஜாக்கிற்கு பரிந்துரை
செய்கிறது.
நாடாளுமன்ற
தேர்தலுக்கு அதிகாரபூர்வமான
அறிவிப்பு வருவதற்குள் தமிழக
அரசு ஆசிரியர்களின்
கோரிக்கைகளை
நிறைவேற்றவில்லையென்றால்,
நாடாளுமன்ற தேர்தலில்
ஆளும்கட்சிக்கு செயல் அளவில்
பாடம் புகட்ட டிட்டோஜாக்
முடிவெடுக்க வேண்டும்.
இவ்வாறு மீனாட்சிசுந்தரம்
தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment