Monday, February 10, 2014

மாவட்ட ஆட்சியரை கண்டித்து, தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் சங்கம் தர்ணா போராட்டம்

குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் சங்கம் சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அச்சங்கத்தின் செயலாளர் கனகராஜ்,
குமரி மாவட்ட ஆட்சியர் நாகராஜன், மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்த வேண்டும் என்ற ஒரு போலியான விளம்பரத்தை பயன்படுத்தி அரசு பள்ளிகளில் எந்த முன் அறிவிப்பும் இல்லாமல் சென்று ஆசிரியர்களையும், தலைமை ஆசிரியர்களையும் தரக்குறைவாக பேசுவதோடு, சஸ்பெண்ட், டிஸ்மிஸ் செய்துவிடுவேன் என்று மாணவர்கள் மத்தியில் ஆசிரியர்களை மனம் வேதனைப்படும்படி பேசிக்கொண்டு வருகிறார். இதனை கண்டித்து தமிழ்நாடு தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் சங்கம் சார்பில் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று (திங்கள்கிழமை) முதல் 5 நாள் தர்ணா போராட்டம் நடைபெறுகிறது. போராட்டத்தில் சங்கத்தில் இருந்து பலர் பங்கேற்கின்றனர் என்றார்.

No comments:

Post a Comment