Tuesday, February 04, 2014

ஆசிரியர் தகுதி தேர்வு விவகாரம் ஐகோர்ட்டில் தீர்ப்பு ஒத்திவைப்பு

ஆசிரியர் தகுதி தேர்வு வழக்கில்
தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
சென்னை
உயர்நீதிமன்ற வக்கீல்கள் பழனிமுத்து, ஏ.ரமேஷ்
ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல்
செய்த வழக்கில் கூறியிருப்பதாவது:தேசிய
கல்வி கவுன்சில் விதிமுறைப்படி, ஆசிரியர்
தகுதி தேர்வில் எஸ்.சி, எஸ்.டி,
பிற்பட்டோர், மிகவும்
பிற்பட்டோருக்கு மதிப்பெண்
சலுகை அளிக்கவேண்டும். தமிழக அரசு எந்த
சலுகையும் அளிக்கவில்லை.
இது சட்டவிரோதமானது. எனவே உயர்நீதிமன்றம்
உரிய உத்தரவு பிறப்பிக்க
வேண்டும்.இவ்வாறு அவர்கள் வழக்கில்
கூறியிருந்தனர்.
இந்த வழக்கை தலைமை நீதிபதி அகர்வால்,
நீதிபதி சத்தியநாராயணன் ஆகியோர்
விசாரித்து தீர்ப்பை தள்ளி வைத்தனர்.இந்த
நிலையில் தகுதி தேர்வில் மதிப்பெண்
சலுகையை இடஒதுக்கீடு அடிப்படையின் கீழ்
தமிழக
அரசு அளித்தது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது
, இருந்தாலும் தேசிய கல்வி கவுன்சில்
விதிமுறை முழுவதுமாக அமுல்படுத்த வேண்டும்
என்று வக்கீல்கள் பழனிமுத்து, ரமேஷ் ஆகியோர்
கூறினர்.

No comments:

Post a Comment