Sunday, February 16, 2014

பள்ளிகளில் புதிய வகுப்பறைகள்: இனி, 'பொதுப் பணித்துறைக்கு நிதி வழங்கப்பட்டு, புதிய வகுப்பறைகள் கட்டப்படும்'

தமிழகத்தில், 1,851 பள்ளிகளில், புதிய
வகுப்பறைகள், கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு
செய்யப்பட்டுள்ளது.
அனைவருக்கும்
இடைநிலை கல்வி திட்டத்தில், மத்திய, -
மாநில அரசுகளின் பங்களிப்புடன்,
அரசு பள்ளிகளுக்கு கூடுதல் வகுப்பறைகள்,
ஆய்வுக்கூடங்கள் கட்டுவதற்கு,
நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
கடந்த 2010--11 ல், பள்ளி தகவல்
மேலாண்மை அறிக்கையின் படி,
ஒவ்வொரு பள்ளிக்கும் தேவையான
வகுப்பறைகள் கட்டுவதற்கு,
அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதன்படி,
தமிழகத்தில் 1,851 உயர்நிலை,
மேல்நிலை பள்ளிகளில் புதிய வகுப்பறைகள்;
698 ஆய்வகங்கள்
கட்டுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.
இதுவரை, அந்தந்த பள்ளி தலைமை ஆரியர்கள்
மேற்பார்வையில், கட்டடங்கள்
கட்டப்பட்டு வந்தன. இனி, 'பொதுப்
பணித்துறைக்கு நிதி வழங்கப்பட்டு, புதிய
வகுப்பறைகள் கட்டப்படும்' என,
அனைவருக்கும்
இடைநிலை கல்வி அதிகாரிகள்
தெரிவித்தனர்.

No comments:

Post a Comment