Monday, February 10, 2014

தொடக்கக்கல்வி பட்டதாரி ஆசிரியர்கள் உண்ணாவிரதம்

தொடக்க கல்வித்துறையில் பணியாற்றும்
பட்டதாரி ஆசிரியர்களின் பதவி உயர்வுக்கு 50% இடங்கள் ஒதுக்க வேண்டும்
என்பது உள்ளிட்ட
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி
தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் சென்னையில் நேற்று
உண்ணா விரதம் இருந்தனர்.சேப்பாக்கம் விருந்தினம்
மாளிகை அருகே நடந்த இந்த
உண்ணாவிரதத்துக்கு தலைமை தாங்கிய
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின்
தலைவர் தியாகராஜன் கூறியதாவது:
பங்களிப்பு ஓய்வு ஊதிய
திட்டத்தை ரத்து செய்து விட்டு மீண்டும் பழைய
ஓய்வு ஊதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
1.6.06க்கு முன்பு தொகுப்பு ஊதியத்தில்
பணியாற்றிய காலத்தையும் பணிக்காலமாக
அறிவிக்க வேண்டும். தொடக்க கல்வித்துறையில்
பணியாற்றும்
பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு
வழங்கும் போது,
முதுநிலை பட்டதாரி பணியிடங்களில்
இருந்து 50% ஒதுக்க வேண்டும். இடைநிலை,
பட்டதாரி ஆசிரியர்கள்,
முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு மத்திய
மாநில ஊழியர்களுக்கு இணையாக ஊதியம் வழங்க
வேண்டும். ஆசிரியர் தகுதித் தேர்வை முற்றிலும்
ரத்து செய்ய வேண்டும். தனியார்
பள்ளிகளுக்கு இணையாக அரசுப் பள்ளிகளை மாற்ற
ஆசிரியர்களுக்கு தகுந்த சுதந்திரம்,
பணிப்பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று நாங்கள்
அரசிடம் வலியுறுத்தி வருகிறோம். ஆனால்
அரசு தரப்பில் இது குறித்து பரிசீலிக்கவில்லை.
அதனால் மத்திய மாநில அரசுகளின்
கவனத்தை ஈர்க்கும் வகை யில் சேப்பாக்கம்,
விருந்தினர் மாளிகை அருகில் நாளை கவன
ஈர்ப்பு உண்ணாவிரதம் இருக்கிறோம். இதில்
தமிழகம் முழுவதில் இருந்து ஆயிரக்கணக்கான
ஆசிரியர்கள் பங்கேற்க உள்ளனர்.
இவ்வாறு தியாகராஜன் தெரிவித்தார்.
உண்ணாவிரதத்தில் தமிழ்நாடு தொடக்கப்
பள்ளி ஆசிரியர் மன்றத் தின் செயலாளர்
மீனாட்சி சுந்தரம், தொடக்கப் பள்ளி ஆசிரியர்
சங்கங்களின் கூட்டமைப்பின் அகில இந்திய
செயலாளர்அண்ணாமலை,
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக தலை வர்
சிதம்பரஹரி, தமிழக ஆரம்பபள்ளி ஆசிரியர்
கூட்டணியின் செயலாளர் தாஸ் உள்பட பல
சங்கங்களின் பிரதிநிதிகள் வாழ்த்திப் பேசினர்.

No comments:

Post a Comment