Monday, February 03, 2014

பள்ளி கட்டண நிர்ணயக் குழுவின் உத்தரவை ரத்து செய்யக் கோரி மனு அரசுக்கு நோட்டீஸ்

பள்ளி கல்விக் கட்டண நிர்ணயக்குழு நிர்ணயித்த கட்டண உத்தரவை ரத்து செய்யக் கோரி தனியார் பள்ளி தாக்கல் செய்த மனுவுக்கு பதில் அளிக்குமாறு அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அகர்வால் வித்யாலயா மெட்ரிகுலேசன்
மேல்நிலைப் பள்ளி உயர்நீதிமன்றத்தில்
தாக்கல் செய்த மனு விவரம்: அகர்வால்
உதவி மற்றும் கல்வி அறக்கட்டளையின் கீழ்
எங்கள் பள்ளி கடந்த 1980-ஆம்
ஆண்டு தொடங்கப்பட்டது. கடந்த 1997-ஆம்
ஆண்டு வரை சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ்
செயல்பட்டது.
அதன் பிறகு மெட்ரிகுலேசன் பாடத் திட்டத்தில்
செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில்
கடந்த 2009-ஆம்
ஆண்டு தமிழ்நாடு பள்ளிகளின் கட்டண
நிர்ணய ஒழுங்குமுறைச் சட்டம்
அறிமுகப்படுத்தப்பட்டது.
இதன்படி எங்களது பள்ளிக்கான கட்டணம்
நிர்ணயிக்கப்பட்டது. இந்த நிலையில்
2013-2014 கல்வி ஆண்டுக்கு எல்கேஜி முதல்
பிளஸ் 2 வரையிலான கல்விக்
கட்டணத்தை தனியார் பள்ளி கட்டண
நிர்ணயக்குழு நிர்ணயித்தது.
இந்த உத்தரவு கடந்த ஆண்டு ஜூலை 2-ஆம்
தேதிதான் எங்களுக்கு கிடைத்தது. இந்த
உத்தரவுக்கு மறுப்பு தெரிவித்து கட்டணத்தை
திருத்தி அமைக்க கோரினோம். இதற்கான
அனைத்து ஆவணங்களையும் நிர்ணயக்
குழுவில் தாக்கல் செய்தோம். ஆனால்,
எங்களது எந்த ஆவணங்களையும் கவனத்தில்
எடுத்துக் கொள்ளாமல்
நிர்ணயக்குழு தாங்களாகவே கல்விக்
கட்டணத்தை நிர்ணயித்துள்ளனர். எனவே,
கல்விக் கட்டண நிர்ணயக் குழுவின்
உத்தரவை ரத்து செய்து, புதிய
கட்டணத்தை நிர்ணயிக்க உத்தரவிட வேண்டும்
என மனுவில் கோரப்பட்டது.
இந்த மனு நீதிபதிகள் சதீஷ்
கே.அக்னிஹோத்ரி, கே.கே.சசிதரன் ஆகியோர்
அடங்கிய அமர்வு முன்பு வெள்ளிக்கிழமை
விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில்
அரசு சிறப்பு வழக்குரைஞர்
சஞ்சய்காந்தி ஆஜரானார். இந்த
மனுவுக்கு பதில் அளிக்குமாறு நோட்டீஸ்
அனுப்ப நீதிபதிகள்
உத்தரவிட்டு வழக்கை அடுத்த
வாரத்துக்கு ஒத்தி வைத்தனர்.

No comments:

Post a Comment