தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2
வகுப்புகளுக்கான தேர்வுகள் மார்ச் 3ம்
தேதி தொடங்கியது.
வரும் 25ம்வகுப்புகளுக்கான தேர்வுகள் மார்ச் 3ம்
தேதி தொடங்கியது.
தேதி வரை நடக்கிறது. தமிழகம், புதுச்சேரியில்
5,600 பள்ளிகளை சேர்ந்த சுமார் 10 லட்சம் மாணவ,
மாணவிகள் இந்த தேர்வில் பங்கேற்று வருகின்றனர்.
இந்நிலையில் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும்
பணி தொடர்பான ஆலோசனை கூட்டம் சென்னையில்
நடந்துள்ளது. இதில் மாநிலம் முழுவதும் 66
மையங்களில் விடைத்தாள் திருத்தும் பணி மார்ச்
21ம் தேதி தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அன்று மொழிப்பாடங்களுக்கான விடைத்தாள்
திருத்தும் பணிகளை முதன்மை தேர்வர்கள் தொடங்க
உள்ளனர். முதன்மை தேர்வர்கள்,
கூர்ந்தாய்வு அலுவலர்கள் மார்ச் 21, 22ம் தேதிகளில்
விடைத்தாள் திருத்தும் பணிகளை மேற்கொள்வர்.
மார்ச் 24ம் தேதி முதல் துணை தேர்வர்கள்
விடைத்தாள் திருத்தும் பணிகளை தொடங்குவர்.
முதன்மை தேர்வர்கள், கூர்ந்தாய்வு அலுவலர்கள் இதர
பாடங்களுக்கான விடைத்தாள் திருத்தும்
பணிகளை மார்ச் 28, 29 தேதிகளில் மேற்கொள்வர்.
இதனையே துணை தேர்வர்கள் மார்ச் 31ம்
தேதி தொடங்குவர். அந்த வகையில் விடைத்தாள்
திருத்தும் பணி ஏப்ரல் 10ம் தேதிக்குள்
நிறைவு பெறும் என்று கல்வித்துறை வட்டாரங்கள்
தெரிவித்துள்ளன. பொதுத்தேர்தல் முடிவுகள்
வெளியாகும் முன்னர்
பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட
கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
No comments:
Post a Comment