Wednesday, March 26, 2014

எஸ்.எஸ்.எல்.ஸி., தேர்வு துவக்கம் திருச்சியில் 40,444 பேர் பங்கேற்பு

திருச்சி மாவட்டத்தில் 40 ஆயிரத்து, 444 பேர் இன்று எஸ்.எஸ்.எல்.ஸி., தேர்வு எழுதுகின்றனர்.

கடந்த 3ம் தேதி துவங்கி, 2013-14ம்
ஆண்டுக்கான ப்ளஸ் 2
பொதுத் தேர்வு நேற்றுடன்
முடிவடைந்தது.
இதையடுத்து எஸ்.எஸ்.எல்.ஸி., பொதுத்
தேர்வு இன்று (26ம் தேதி) தமிழகம் முழுவதும் துவங்கி,
ஏப்ரல் 9ம் தேதி முடிவடைகிறது.
திருச்சி வருவாய் மாவட்டத்தில் பள்ளிகளில்
பயின்ற, 20ஆயிரத்து,552 மாணவர்கள்,
19ஆயிரத்து, 892 மாணவிகள் என
மொத்தம் 40ஆயிரத்து, 444 பேர்
தேர்வு எழுதவுள்ளனர். இது தவிர தனித் தேர்வர்கள்
பலரும் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர்.
இதில், திருச்சி கல்வி மாவட்டத்தில் 234 பள்ளிகளைச்
சேர்ந்த 24ஆயிரத்து,508 மாணவ மாணவிகளும்,
லால்குடி கல்வி மாவட்டத்தில் 7,286 பேரும்,
முசிறி கல்வி மாவட்டத்தில் 8,650 பேரும் அடங்குவர்.
இதற்காக மாவட்டம் முழுவதும் 137
தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. தனித்
தேர்வர்களுக்கு 13 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
தேர்வுக்கான வினாத்தாள் திருச்சியில் 6,
லால்குடியில் 3, முசிறியில் 5 என மொத்தம்
14 காப்பகங்களில், துப்பாக்கி ஏந்திய போலீஸ்
பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.
தேர்வின் போது காப்பி அடிப்பது உள்ளிட்ட
முறைகேடுகளை கண்காணிக்க 3 மாவட்ட
கல்வி அதிகாரிகள் தலைமையில் 150 பேர்
கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.
காலை 9.15 மணி முதல், 9.25
மணி வரை வினாத்தாள் படிக்க நேரம்
ஒதுக்கப்படுகிறது. 9.25 முதல் 9.30
மணி வரை விடைத்தாளில் உள்ள விபரங்கள்
சரிபார்க்க அவகாசம் வழங்கப்படும். காலை 9.30
மணிக்கு தேர்வு துவங்கி, 12 மணிக்கு நிறைவடையும்.
முதல் நாளான இன்று, தமிழ் முதல் தாள்
தேர்வும், நாளை தமிழ் இரண்டாம் தாள், ஏப்ரல்
1ம் தேதி ஆங்கிலம் முதல் தாள், ஏப்., 2ம்
தேதி ஆங்கிலம் இரண்டாம் தாள், ஏப்ரல் 4ம்
தேதி கணிதம், ஏப்ரல் 7ம் தேதி அறிவியல், ஏப்ரல் 9ம்
தேதி சமூக அறிவியல் தேர்வு நடக்கிறது.
தேர்வுக்கான
ஏற்பாடுகளை கல்வித்துறை அதிகாரிகள்
செய்யுள்ளனர்.

No comments:

Post a Comment