Saturday, March 29, 2014

5ம் வகுப்பு மாணவர்களின்கற்றல் திறன் அறியசிறப்பு தேர்வு

5ம் வகுப்பு மாணவர்களின் கற்றல் திறனை அறிய தமிழகத்தில் 15
மாவட்டங்களில் சிறப்புத்தேர்வு நடத்தப்படுகிறது. மாநில கல்வியியல் ஆராய்ச்சி நிலையம் சார்பில் தமிழகத்தில் பள்ளிகளில் கட்டமைப்பை மேம்படுத்தவும், பாட திட்டங்களை வடிவமைக்கவும் முன்னேற்பாடாக
5ம் வகுப்பு மாணவர்களுக்கு தேசிய அளவில் அறிவுத்திறன் தேர்வு நடத்த
திட்டமிடப்பட்டுள்ளது.
இத்தேர்வில் 5ம்
வகுப்பு மாணவர்கள் கற்றதன்மூலம் அடைந்த
திறன்குறித்து தமிழ், கணிதம்,
சூழ்நிலையியல் ஆகிய பாடங்களில்
இருந்து கேள்விகள் கேட்கப்படும்.
ஒரு மாணவர் 2 பாடத்தில் தேர்வு எழுத
வேண்டும். பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள்
விவரங்களை அதற்கென வழங்கப்பட்ட
படிவங்களில் பூர்த்தி செய்து அனுப்ப
வேண்டும். தமிழகத்தில் நெல்லை, சென்னை,
கன்னியாகுமரி, விருதுநகர், திருப்பூர்,
கிருஷ்ணகிரி, ராமநாதபுரம், திண்டுக்கல்,
மதுரை, நாமக்கல், சேலம், விழுப்புரம்,
தர்மபுரம், வேலூர், திருவள்ளூர் ஆகிய 15
மாவட்டங்களில் 275 பள்ளிகளில் வரும் ஏப்ரல்
10, 11, மற்றும் 15, 16 ஆகிய தேதிகளில் இந்த
அறிவுத்திறன் தேர்வு நடைபெறுகிறது.
மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும்
பயிற்சி நிறுவனம் இத்தேர்வை நடத்த
உள்ளது. ஏற்பாடுகளை மாவட்ட
கல்வி அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

No comments:

Post a Comment