எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு, துவங்கிய நிலையில், தேர்வு முடிவு, முன்கூட்டியே வெளியிடப்பட்டு, ஜூன், 16ம் தேதி, பிளஸ் 1 வகுப்புக்கும், மற்ற வகுப்புகளுக்கு, ஜூன், 2ம் தேதியும், பள்ளிகள் திறந்து வகுப்பு எடுக்க, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில், எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வு, துவங்கி நடந்து வருகிறது.
வரும் ஏப்ரல், 9ம் தேதி வரை நடக்கிறது. பிளஸ் 2 தேர்வை போலவே, எவ்வித முறைகேடுக்கும் இடம் தராமல் நடத்த, தேர்வுத்துறை தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதேபோல், விடைத்தாள் திருத்தும் பணிகளையும் துரிதப்படுத்தி, தேர்வு முடிவுகளை விரைவாக வெளியிட ஏற்பாடு நடக்கிறது. கடந்த, 2012-13ம் கல்வி ஆண்டில், எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு முடிவு, கடந்த, மே, 31ம் தேதி வெளியிடப்பட்டு, ஜூன், 24ம் தேதி முதல், அரசு மேல்நிலைப் பள்ளிகளில், பிளஸ் 1 வகுப்பு எடுக்கப்பட்டது. ஆனால், நடப்பு கல்வி ஆண்டில், பிளஸ் 1 வகுப்பு, முன்கூட்டியே நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த, ஜூன் மாதம்வழக்கமாக, பிளஸ் 1 தவிர மற்ற வகுப்பு பள்ளிகள் திறக்க வேண்டி இருந்தும், கோடை வெப்பம் காரணமாக, துவக்க, உயர்நிலை, பிளஸ் 2 வகுப்புக்கு, கடந்த, ஜூன், 10ம் தேதி திறக்க, தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த ஆண்டு, எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு பணிகளை விரைவாக முடித்து, முன்கூட்டியே தேர்வு முடிவு அறிவிக்கப்பட்டு, பிளஸ் 1 வகுப்பும், முன்கூட்டியே நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
கல்வி அதிகாரிகள் கூறியதாவது: எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு முடிவு, லோக்சபா தேர்தல் முடிவு வெளியிட்ட பின் அறிவிக்கப்படும். கடந்த, ஜூன், 24ம் தேதி, பிளஸ் 1 வகுப்புக்கு மாணவர்கள் சேர்க்கை நடத்தி, வகுப்பு துவங்கப்பட்டது. நடப்பு கல்வி ஆண்டுக்கு, வரும், ஜூன், 16ம் தேதி, பிளஸ் 1 மாணவர் சேர்க்கை நடத்தி, வகுப்பு துவங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல், துவக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் 2 ஆகிய வகுப்புகளுக்கு, ஜூன், 2ம் தேதி பள்ளிகள் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. எஸ்.எஸ்.எல்.சி.,க்கு மட்டும், நடப்பு கல்வி ஆண்டில், எட்டு நாள் முன்னதாக, பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்பு நடத்தப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment