Tuesday, March 11, 2014

சென்டம்' அதிகரிக்கும்: 'ஈசி'யான தேர்வால், மாணவர்கள் 'குஷி'

பிளஸ் 2 மாணவர்களுக்கு, நேற்று நடந்த,
இயற்பியல் தேர்வு, மிகவும் எளிதாக இருந்ததால், இந்த பாடத்தில், 'சென்டம்'
எண்ணிக்கை அதிகரிக்கும் என, இயற்பியல் பாட ஆசிரியர்கள்,
நம்பிக்கை தெரிவித்தனர்.

எதிர்பார்த்ததை விட, தேர்வு எளிதாக
அமைந்ததால், மாணவர்களும், 'குஷி'
அடைந்துள்ளனர். மொழிப்பாட தேர்வுகளுக்குப்
பின், முக்கிய தேர்வுகள், நேற்று துவங்கின.
நேற்று, இயற்பியல் மற்றும் பொருளியல்
தேர்வுகள் நடந்தன. இயற்பியல்
தேர்வு எப்படி இருக்குமோ என, மாணவர்கள்,
பதற்றத்தில் இருந்தனர். ஆனால்,
எதிர்பார்த்ததை விட, தேர்வு எளிதாக
இருந்ததாக தெரிவித்தனர். ஒரு மதிப்பெண்,
ஐந்து மதிப்பெண், 10 மதிப்பெண் என,
அனைத்துப் பகுதிகளுமே, எளிதாக
இருந்ததாக, தேர்வு எழுதிய மாணவ,
மாணவியர் தெரிவித்தனர்.
இயற்பியல் பாட ஆசிரியர் ஒருவர்
கூறியதாவது: தேர்வு, மிக மிக எளிதாக
இருந்தது. குறிப்பாக, ஒரு மதிப்பெண்
பகுதி மிகவும் எளிது. கடந்த தேர்வில்
கேட்கப்பட்ட, ஐந்து கேள்விகள், திரும்பவும்,
வேறு மாதிரியாக கேட்கப்பட்டிருந்தன. மற்ற
கேள்விகளும், எளிதாக இருந்தன.
ஐந்து மதிப்பெண், 10 மதிப்பெண்
கேள்விகளும், எளிதாக இருந்தன.
எட்டாவது பாடத்தில் இருந்து, மாணவர்,
கேள்விகளை எதிர்பார்ப்பர். அதன்படி, அந்த
பாடத்தில் இருந்து, ஐந்து மதிப்பெண் கேள்வி,
கேட்கப்பட்டு உள்ளது. கடந்த தேர்வில், 36
மாணவர், இயற்பியலில், 200க்கு 200,
மதிப்பெண் பெற்றனர். இந்த எண்ணிக்கை,
இந்த ஆண்டு, கண்டிப்பாக அதிகரிக்கும்.
சுமாராக படிக்கக்கூடிய மாணவர் கூட,
இயற்பியலில், தேர்ச்சி பெற்றுவிடுவர்.
இவ்வாறு, அந்த ஆசிரியர் தெரிவித்தார்.
இயற்பியல், பொருளியல் தேர்வுகளில், 'பிட்'
அடித்ததாக, 36 மாணவர்கள், பறக்கும்
படை குழுவினரிடம் பிடிபட்டனர். நாகை,
நெல்லை, ராமநாதபுரம், அரியலூர், விழுப்பரம்,
கரூர், திருச்சி, திருவண்ணாமலை, வேலூர்,
சென்னை ஆகிய, 10 மாவட்டங்களைச் சேர்ந்த
மாணவர்கள், பிடிபட்டனர். இயற்பியல்,
பொருளியல் பாடங்களில், பள்ளி மாணவர்கள், 12
பேரும், பொருளியல் பாடத்தில்,
தனித்தேர்வு மாணவர், 24 பேரும், சிக்கினர்.
அதிகபட்சமாக, நெல்லை மாவட்டத்தில்,
பொருளியல் பாடத்தில், தனித்தேர்வு மாணவர்,
எட்டு பேர், சென்னையில், 11 பேர் பிடிபட்டனர்.

No comments:

Post a Comment