Thursday, April 10, 2014

இன்று முதல் 10-ஆம் வகுப்பு விடைத்தாள் மதிப்பீடு: ஏராளமான மாணவர்கள் சதமடிக்க வாய்ப்பு

பத்தாம் வகுப்பு விடைத்தாள்
மதிப்பீடு தமிழகம் முழுவதும்
வியாழக்கிழமை (ஏப்ரம் 10) தொடங்க உள்ளது.

பத்தாம் வகுப்புத் தேர்வு சமூக அறிவியல்
பாடத் தேர்வுடன் புதன்கிழமை (ஏப்ரல் 9)
நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து தமிழகம்
முழுவதும் 66 விடைத்தாள் திருத்தும்
மையங்களில் விடைத்தாள்
மதிப்பீடு வியாழக்கிழமை தொடங்குகிறது.
வரும் 19-ஆம் தேதிக்குள்
விடைத்தாள்களை திருத்தி முடிக்க தேர்வுகள்
துறை திட்டமிட்டுள்ளது.
தேர்வு எளிது: சமூக அறிவியல்
தேர்வு மிகவும் எளிமையாக இருந்ததாக
மாணவர்கள் தெரிவித்தனர். இந்தப் பாடத்தில்
இந்த ஆண்டு ஏராளமான மாணவர்கள்
சதமடிக்க வாய்ப்புள்ளதாக ஆசிரியர்கள்
தெரிவித்தனர்.
பத்தாம் வகுப்புத் தேர்வு மார்ச் 26-ஆம்
தேதி முதல் நடைபெற்று வந்தது. இந்தத்
தேர்வை 3 ஆயிரத்துக்கும் அதிகமான
மையங்களில் 11 லட்சத்துக்கும் அதிகமான
மாணவர்கள் எழுதினர்.
இந்த ஆண்டு பிளஸ் 2, பத்தாம்
வகுப்பு தேர்வுகளில்
அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பார்கோடு எண்,
புகைப்படத்துடன் கூடிய விடைத்தாள்கள்
போன்ற மாற்றங்களை ஆசிரியர்கள்
வரவேற்றுள்ளதாக தமிழ்நாடு உயர்நிலை,
மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள்
சங்கத்தின் பொதுச்செயலாளர்
சாமி.சத்தியமூர்த்தி அவர் தெரிவித்தார்.
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9-ஆம்
தேதியும், பத்தாம் வகுப்புத்
தேர்வு முடிவுகள் மே 23-ஆம் தேதியும்
வெளியிடப்படும் என
ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment