Saturday, April 26, 2014

ஜுன் 11 முதல் ஆசிரியர் பட்டயத் தேர்வு: கால அட்டவணை வெளியீடு

இடைநிலை ஆசிரியர் பயிற்சிக்கான
தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநர்
கு.தேவராஜன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட
செய்திக்குறிப்பில் கூறியிருப் பதாவது:
தொடக்கக் கல்வி பட்டய படிப்பில் 2-ம்
ஆண்டு மாணவர்க ளுக்கான தேர்வு ஜூன் 11-ம்
தேதி தொடங்கி 18-ம் தேதி வரையும்,
முதலாவது ஆண்டு மாணவர் களுக்கு ஜூன் 20-ம்
தேதி தொடங்கி 27-ம் தேதி வரையும் நடைபெறும்.
தேர்வுகள் தினமும் காலை 10
மணிக்கு தொடங்கி மதியம் 1
மணி வரை நடைபெறும். தேர்வுக்கால
அட்டவணை வருமாறு: இரண்டாம் ஆண்டு ஜூன் 11
(புதன்) இந்திய கல்வி முறை ஜூன் 12 (வியாழன்)
கற்றலை எளிதாக்குதலும், மேம்படுத்துதலும்-2 ஜூன்
13 (வெள்ளி) மொழிக் கல்வி (தமிழ், தெலுங்கு,
உருது, மலையாளம்)-2, இளஞ்சிறார் கல்வி-2 ஜூன்
14 (சனி) ஆங்கில மொழிக்கல்வி-2 ஜூன் 16
(திங்கள்) கணித வியல் கல்வி-2 ஜூன் 17
(செவ்வாய்) அறிவியல் கல்வி-2 ஜூன் 18 (புதன்)
சமூக அறிவியல் கல்வி-2 முதலாம் ஆண்டு ஜூன்
20 (வெள்ளி) கற்கும் குழந்தை ஜூன் 21 (சனி)
கற்றலை எளிதாக்குதலும், மேம்படுத் துதலும்-1
ஜூன் 23 (திங்கள்) மொழிக் கல்வி (தமிழ்,
தெலுங்கு, உருது, மலையாளம்)-1, இளஞ்சிறார்
கல்வி-1 ஜூன் 24 (செவ்வாய்) ஆங்கில
மொழிக்கல்வி-1 ஜூன் 25 (புதன்) கணிதவியல்
கல்வி-1 ஜூன் 26 (வியாழன்) அறிவியல் கல்வி-1
ஜூன் 27 (வெள்ளி) சமூக அறிவியல் கல்வி-1
இவ்வாறு அதில் கூறப்பட்டுள் ளது.

No comments:

Post a Comment