Sunday, April 13, 2014

ஜூன் 18ல் கல்லூரி திறப்பு கல்வித்துறை அறிவிப்பு

உயர்கல்வித்துறையின் கீழ் செயல்படும்
கல்லூரி கல்வித்துறை, அரசு மற்றும்
தனியார் கல்லூரிகள், அடுத்த கல்வி ஆண்டுக்காக, ஜூன், 18ம் தேதி திறக்க
வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

தமிழகத்தில் செயல்படும், 27 பல்கலையின்
கட்டுப்பாட்டில் உள்ள, 67 அரசு கல்லூரி, 162
அரசு உதவிபெறும் கல்லூரி, 274 சுயநிதிக்
கல்லூரி என, 503 கலை மற்றும் அறிவியல்,
உடற்கல்விக் கல்லூரிகள் செயல்படுகிறது.
அந்த கல்லூரிகளில், வழக்கமாக செமஸ்டர்
தேர்வு, ஏப்ரல் மூன்றாம் வாரத்தில் துவங்கும்.
ஆனால், லோக்சபா தேர்தல் தேதி, ஏப்ரல், 24ம்
தேதியாக இருப்பதால், ஏப்ரல் மூன்றாம்
வாரத்தில், தேர்வுகள் நடத்த
உத்தரவிடப்பட்டது. அந்தந்த
பல்கலை நிர்வாகத்தின் தேவைக்கு ஏற்ப,
தேர்வு தேதிகள் அமைத்துக் கொள்ளலாம்.
அதன்படி, சேலம் பெரியார் பல்கலையில்,
ஏப்ரல், 28ம் தேதி முதல், மே, 28ம் தேதி வரை,
இளநிலை மற்றும்
முதுநிலை மாணவர்களுக்கான தேர்வுகள்
நடத்தப்படும் என
அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், கல்லூரி கல்வித்துறை, சில
தினங்களுக்கு முன், அடுத்த
கல்வி ஆண்டுக்கான,
கல்லூரி திறப்பு தேதியை வெளியிட்டுள்ளது
. அதில், ஜூன், 18ம் தேதி,
அனைத்து அரசு மற்றும் தனியார் கல்லூரிகள்
திறக்க வேண்டும்.
மேலும், கல்வித்துறை அனுமதிக்கப்பட்ட
வேலை நாட்களை, அந்தந்த
பல்கலை அனுமதியுடன் செயல்படுத்த
வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
"உயர்கல்வித்துறையின் கீழ் இயங்கும்,
கல்லூரி கல்வித்துறை உத்தரவுபடி, கடந்த
கல்வி ஆண்டில், ஜூன், 20ம்
தேதி கல்லூரி திறக்கப்பட்டது. ஆனால்,
அடுத்த கல்வி ஆண்டிற்கு, ஜூன், 18ம்
தேதி திறக்க உத்தரவிட்டுள்ளது' என,
கல்லூரித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment