Tuesday, April 29, 2014

வேளாண்மை பல்கலைக்கழகத்தில் 2-ந் தேதி முதல் விண்ணப்பங்கள் வினியோகம்

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணை வேந்தர் ராமசாமி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:–

கோவை வேளாண்மை பல்கலைக்கழகம் இந்திய அளவில் 25–வது இடத்தில் உள்ளது. ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு மாணவர்களை அனுப்புதல், காப்புரிமை பெறுதலில் முன்னணி, மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தில் முன்னணி, ஆசிரியர்களின் திறமையான பயிற்சி ஆகிய தகுதிகளின் அடிப்படையில் தொடர்ந்து முதல் நிலை பெற்று விளங்குகிறது.
மத்திய அரசு கிராம பகுதிகளில் புதிதாக கிராமிய வங்கிகளை தொடங்க உள்ளது. இந்த வங்கிகளின் பணிபுரிய வேளாண்மை பல்கலைக்கழக மாணவர்களை தேர்வு செய்ய உள்ளது. வேளாண்மை பயிலும் மாணவர்களுக்கு மத்திய அரசு மற்றும் வெளிநாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் இருந்து இந்த ஆண்டு அதிக அளவில் ஸ்காலர்ஷிப்புகள் வழங்கப்பட உள்ளது.
புதிதாக டீச்சிங் அசிஸ்டென்ட் என்ற பணி வேளாண்மை பல்கலைக்கழகத்தில் தொடங்கப்பட உள்ளது. இதில் பணிபுரிபவர்களுக்கு உதவி பேராசிரியருக்கு இணையான சம்பளம் வழங்கப்பட உள்ளது.
வருகிற ஆண்டு பி.எஸ்.சி. அக்ரி, பி.எஸ்.சி. தோட்டக்கலைத்துறை, பி.எஸ்.சி. மனையியல் துறை, பி.எஸ்.சி. வனவியல், அக்ரி என்ஜினீயர் பி.டெக், பி.எஸ்.சி. பட்டு வளர்ப்புத்துறை உள்பட 25 படிப்புகளுக்கான விண்ணப் பங்கள் வழங்கப்படுகிறது.
இந்த விண்ணப்பங்களை வருகிற 2–ந் தேதி முதல் 12–ந் தேதி வரை பெறலாம். ஆன்லைனிலும் விண்ணப் பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் கொடுக்க கடைசி நாள் 7.6.2014 ஆகும். முதல் கட்ட கவுன்சிலிங் 30.6.2014 அன்று தொடங்குகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment