Tuesday, April 29, 2014

30 லட்சம் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ்

அரசு பஸ்களில் பயணிக்கும், 30 லட்சம்
மாணவர்களுக்கான இலவச பஸ் பாஸ் தயாரிக்கும் பணிக்கு, இந்திய சாலை போக்குவரத்து நிறுவனமான, ஐ.ஆர்.டி.,
சார்பில், டெண்டர் கோரப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் உள்ள,
எட்டு போக்குவரத்து கழகங்கள் சார்பில், 22
ஆயிரம் பஸ்கள் இயக்கப்படுகின்றன.
அரசு பள்ளிகளில், 1ம் வகுப்பு முதல் பிளஸ் 2
வரை படிக்கும் மாணவர்கள்; அரசு கல்லூரிகள்
மற்றும் பாலிடெக்னிக் மாணவர் களுக்கு,
ஆண்டுதோறும், இலவச பஸ் பாஸ்
வழங்கப்படுகிறது.
மாணவ, மாணவியரின் புகைப்படத்துடன்
கூடிய, "ஸ்மார்ட் கார்டாக' பஸ் பாஸ்
வழங்கப்படுகிறது. வரும் கல்வி ஆண்டில், 30
லட்சம் மாணவர்களுக்கு பஸ் பாஸ் வழங்க
திட்டமிடப்பட்டுள்ளது.
இதை தயாரிக்கும் பணிக்காக, ஐ.ஆர்.டி.,
சார்பில், டெண்டர் கோரப்பட்டுள்ளது. டெண்டரில்
பங்கேற்க, மே, 13ம் தேதி கடைசி நாள்.

No comments:

Post a Comment