Tuesday, April 22, 2014

ஆசிரியர்கள் வருகை கண்காணிக்க எஸ்.எம்.எஸ்.,!; 3 ஆண்டுகளாகியும், 'காகிதத்தில் திட்டம்'

தமிழகத்தில், எஸ்.எம்.எஸ்., வழியாக
ஆசிரியர்களின் வருகையை கண்காணித்து முறைப்படுத்தும்
திட்டம் அறிவிக்கப்பட்டு, மூன்றாண்டுகள்
ஆகியும், இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை.

அரசு பள்ளிகளில், தலைமையாசிரியர்கள்,
ஆசிரியர்கள் சரியான
நேரத்துக்கு வருவதில்லை என்றும்,
விடுமுறை சார்ந்த தகவல்கள் தெளிவாக
பதிவு செய்வதில்லை என்றும்
தொடர்ந்து பல்வேறு இடங்களிலிருந்து,
புகார்கள் பெறப்பட்டு வந்தன. இதையடுத்து,
ஆசிரியர்களின் வருகையை கண்காணிக்க
'எஸ்.எம்.எஸ்., கண்காணிப்பு திட்டம்'
அமல்படுத்தப்பட்டது. இத்திட்டம்,
முதல்கட்டமாக, 2011 ஜூன் முதல் கடலுார்
மாவட்டத்தில், 1500 பள்ளிகளில்
செயல்படுத்தப்பட்டது.இத்திட்டத்தின் படி,
ஒவ்வொரு பள்ளிக்கும் தனி குறியீட்டு எண்
வழங்கி, தேசிய தகவல்
மையத்துக்கு எஸ்.எம்.எஸ்., வழியாக தினமும்
தகவல் அனுப்பப்படும்
என்று அறிவிக்கப்பட்டது. அதாவது,
காலை 9.30 மணிக்கு ஆசிரியர்கள்
பணிக்கு வரும்போது,
தலைமை ஆசிரியருக்கு தகவல் தெரிவிக்க
வேண்டும்.தலைமை ஆசிரியர் எவ்வளவு பேர்,
எத்தனை மணிக்கு வந்தனர்; யார்
வரவில்லை என்ற தகவலை எஸ்.எம்.எஸ்.,சில்
உதவி தொடக்கக்
கல்வி அதிகாரிக்கு தெரிவித்து,
அத்தகவலை பெற்று, கலெக்டர்
அலுவலகத்துக்கு தெரியப்படுத்த வேண்டும்.
அங்கு கணினியில் பதிவு செய்யப்படும்;
தினமும் பட்டியல் கலெக்டர் பார்வைக்கு
வைக்கப்படும்.பெற்றோர்கள் மத்தியில் அதிக
வரவேற்பை பெற்ற இத்திட்டம், 2013-14ம்
கல்வியாண்டின் துவக்க நாள் முதல்
அனைத்து மாவட்டங்களிலும்
நடைமுறைப்படுத்தப்படும்
என்று அறிவிக்கப்பட்டது. ஆனால்,
இதுவரை இத்திட்டம்
நடைமுறைப்படுத்தவில்லை.
ஒய்.டபிள்யூ. சி.ஏ., அமைப்பின் சமூக ஆர்வலர்
மகேஷ் கூறுகையில்,
''கிராமப்பகுதிகளுக்கு சென்று
மாணவர்களுக்கு பல்வேறு பயிற்சி முகாமை
நடத்தி வருகிறோம்.
பல கிராமபுற பகுதிகள், நகர்
புறங்களை சேர்ந்த பள்ளிகளில், சில
ஆசிரியர்கள் பள்ளிக்கு வராமல் இருப்பதும்,
தாமதமாக வருவதுமாக இருந்தனர்.
இதுகுறித்து கல்வி அதிகாரிகளிடம் பல
முறை புகார் தெரிவித்துள்ளோம்.
எஸ்.எம்.எஸ்., வாயிலாக ஆசிரியர்
வருகையை கண்காணிக்கும் திட்டம், வரும்
கல்வியாண்டிலாவது அமல்படுத்த வேண்டும்.
அப்போது, ஆசிரியர்கள்
வருகை வரைமுறை செய்யப்பட்டு, மாணவர்கள்
பயனடைவர்,'' என்றார்.

No comments:

Post a Comment