Thursday, April 10, 2014

பத்தாம் வகுப்பு பள்ளி தேர்ச்சி விகிதத்தை நிர்ணயிக்கும் பாடம், கணிதம்!

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மாதம் 26-ம்
தேதி துவங்கியது.
இந்தத் தேர்வுகள்
நேற்றுடன் நிறைவு பெற்றது .பத்தாம்
வகுப்புத் தேர்வு விடைத்தாள்கள் திருத்தும்
பணி இன்று முதல் துவங்குகிறது. இதில்
750 ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும்
பணியில் ஈடுபடவுள்ளனர்.
10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வரும்
மே மாதம் 23-ம் தேதியும், 12-ம்
வகுப்பு தேர்வு முடிவுகள் மே 9-ம் தேதியும்
வெளியிடப்படும் என்று பள்ளிக்
கல்வி தேர்வுத் துறை அறிவித்துள்ளது.
தமிழக அளவில் பெரும்பாலான பள்ளிகளில்
மற்ற பாடங்களைக் காட்டிலும் கடந்த
ஆண்டு தமிழ் பாடத்தில்தேர்ச்சி பெற்றவர்கள்
சதவீதம் குறைவாக இருந்தது. ஆனால் இந்த
ஆண்டு தமிழ் மற்றும் ஆங்கிலம் பாடங்களின்
வினாத்தாள்கள்
ஓரளவிற்கு சுலபமாகவே இருந்தது. மேலும் 75
மதிப்பெண்ணுக்கு 2.30 மணி நேரம்
தேர்வு எழுதும் அறிவியல் பாடத்திலும்
கேள்விகள் சுலபமாகவே இருந்ததாக
மாணவர்கள் கூறினர். இதே நிலை தான் சமூக
அறிவியல் பாடத்திலும் சுலபமான வினாக்கள்
கேட்கப்பட்டிருந்தன.
ஆனால் கணித பாடத்தில் மட்டும்
தேர்ச்சி பெறுவதே சிரமம் என்று கருதக்கூடிய
மாணர்வர்கள் அவசியம்
படித்து வைத்திருந்து எதிர்பார்த்த
வினாக்களான, வர்க்கமூலம் மற்றும் கணமூலம்
வினாக்கள் கூட தவிர்க்கப்பட்டு வினாத்தாள்
அமைக்கப்பட்டிருந்தது. மேலும் கட்டாய
வினாவும் புத்திசாலி மாணவர்கள்
மட்டுமே நன்கு தயார் செய்து வைத்திருந்த
வினாவாக கேட்கப்பட்டிருந்தது. இதனால்
கணித பாடத்தில் 100 க்கு 100 பெறுவோரின்
சதவீதம் மிக குறையும் என
எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக
அரசு பள்ளிகளின்
தேர்ச்சி சதவீதத்தை நிர்ணயிக்கக்கூடிய
பாடமாக கணிதம் இருந்தால்
ஆச்சரியப்படுவதற்கில்லை!

No comments:

Post a Comment