Saturday, April 12, 2014

நாடாளுமன்ற தேர்தல் பணி அலுவலர்கள் கணினி மூலம் தேர்வு

திருச்சி தொகுதியில் தேர்தல் பணியில்
ஈடுபடும் அலுவலர்கள் தொகுதி வாரியாக
கணினி மூலம் நேற்று தேர்வு செய்யப்பட்டனர்.

நாடாளுமன்ற
தேர்தலை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில்
பொதுமக்கள் வாக்களிக்க ஏதுவாக 2,319
வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வாக்குசாவடிகளிலும் 1
வாக்குசாவடி தலைமை அலுவலர், 4வாக்குச்
சாவடி நிலை அலுவலர்கள்
பணியாற்றுபவர்கள் நடைபெற உள்ள
பாராளுமன்ற தேர்தலில் திருச்சி மாவட்டத்தில்
மொத்தம் 11,410 பணியாளர்கள் தேர்தல்
பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
தேர்தல் பணியில் ஈடுபட உள்ள
வாக்குசாவடி தலைமை அலுவலர்,
வாக்குசாவடி நிலை அலுவலர்கள் 1, 2, 3
மற்றும் 4 ஆகியோரை முதற் கட்டமாக
தேர்வு செய்யும் பணி கடந்த 29ம்
தேதி அன்று நடைபெற்றது.
திருச்சி தொகுதி தேர்தல் பணிக்காக முதற்
கட்டமாக
தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பயிற்சி
வகுப்புகள் 2 நாள் நடத்தப்பட்டது.
தற்போது முதற்கட்ட பயிற்சி பெற்ற
பணியாளர்கள், எந்தெந்த சட்டமன்ற
தொகுதியில் தேர்தல் பணி யில் ஈடுபட
வேண்டும் என்பது குறித்தும், பின்னர்
குழு வாரியாக
வாக்குச்சாவடி தலைமை அலுவலர்,
வாக்குசாவடி நிலை அலுவலர்கள் 1,2,3 மற்றும்
4தேர்வு செய்யும் பணியும் கணினி மூலம்
தேர்வு செய் தல் மாவட்ட கலெக்டர் மற்றும்
தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெயஸ்ரீ
தலைமையில் தேர்தல் பொது ப்பார்வையாளர்
ஹரேந்திரநாத் போரா, செலவின
பார்வையாளர்கள் சத்யஜித் சிங், சிவ்பிரகாஷ்
வி.பட்டி ஆகியோர் முன்னிலையில்
நேற்று நடைபெற்றது.

No comments:

Post a Comment