Tuesday, April 15, 2014

ஆசிரியர் பணி இடமாறுதலில் முறைகேடு ஆசிரியர்கள் புகார்

ஆசிரியர் பணி இடமாறுதலில்
பல்வேறு முறைகேடு நடந்து வருவதாக
ஆசிரியர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

தமிழகத்தில் அரசு தொடக்க மற்றும்
நடுநிலைப்பள்ளிகள் சுமார் 31466 உள்ளன.
இடைநிலை மற்றும்
பட்டதாரி ஆசிரியர்களுக்கு கல்வி ஆண்டு
முழுவதும் பல்வேறு மாதங்களில்
பணி இடமாறுதல் வழங்கப்பட்டு வந்தது.
கடந்த 10
ஆண்டுகளுக்கு முன்பிருந்து கல்வி
ஆண்டின் தொடக்கத்தில் ஆசிரியர்கள்
பள்ளியில் சேரும் வகையில் மே மதம்
பொதுமாறுதல் கவுன்சிலிங்
நடத்தப்பட்டு வருகிறது.
ஆசிரியர்களின் விருப்பம் மற்றும்
மாணவர்களின் கல்வி பாதிக்காத
வகையில் இந்த கவுன்சிலிங் மூலம்
ஆசிரியர்கள் இடமாறுதல்
நடைபெற்று வருகிறது. ஒளிவு மறைவற்ற
நிலையில் மாவட்டத்தில் உள்ள எந்த
பள்ளியில் காலிப்பணியிடம் உள்ளது என்ற
அனைத்து விபரமும் கவுன்சிலிங்கில்
பங்கு பெறும்
ஆசிரியர்களுக்கு தெரியப்படுத்தப்படும்.
இதில் பணம் பெற்றுக்கொண்டு இடமாறுதல்
செய்வது உள்ளிட்ட முறைகேடு நடக்க
வாய்ப்பில்லை. இதனால்
பொது கவுன்சிலிங்கின் போது இல்லாமல்
நிர்வாக மாறுதல் என்ற பெயரில் மற்ற
மாதங்களில் இடமாறுதல்
செய்யப்படுகிறது.
கடந்த மூன்று மாதத்தில் மட்டும்
சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம்,
புதுக்கோட்டை, சென்னை, கோவை,
நெல்லை உள்ளிட்ட தமிழகம் முழுவதும்
மாவட்டத்திற்கு சுமார் 20 ஆசிரியர்கள் வீதம்
சுமார் 600க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள்
இடமாறுதல் பெற்றுள்ளனர்.
இதுகுறித்து ஆசிரியர் சங்க
நிர்வாகி ஒருவர் கூறுகையில்,
மாணவர்களின்
கல்வி பாதிக்கக்கூடாது மற்றும்
முறைகேடு நடக்கக்கூடாது என்பதற்காகவே
ஒளிவு மறைவற்ற பொதுமாறுதல்
கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. ஆனால்
கல்வித்துறையில்
ஒரு இடமாறுதலுக்கு ரூ.3 லிருந்து 5 லட்சம்
வரை பெற்றுக்கொண்டு வருடம் முழுவதும்
இடமாறுதல் செய்யப்படுகிறது. இதனால்
கவுன்சிலிங் நடத்துவதில் பயன்
இல்லாமல் போய்விடும். நியாயமான
முறையில் மாறுதலுக்காக காத்திருக்கும்
ஆசிரியர்கள் பாதிக்கப்படுகின்றனர்
என்றார்.

No comments:

Post a Comment