Wednesday, April 02, 2014

ஆங்கில தேர்வில் படம் இருட்டடிப்பு: ஐந்து மதிப்பெண் வழங்க கோரிக்கை

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, நேற்று நடந்த, ஆங்கிலம் முதல் தாள் தேர்வில்,
ஒரு கேள்விக்குரிய படம், சரியாக, 'பிரின்ட்' ஆகாமல், கறுப்பாக இருந்ததால், மாணவர்கள் அவதிப்பட்டதாக, புகார் எழுந்துள்ளது.

ஐந்து மதிப்பெண் பகுதியில்,
53வது கேள்வி, 'படத்தை பார்த்து, சில
வரிகளில், மாணவர்கள், தங்கள் சொந்த
கருத்தை எழுத வேண் டும்' என,
கேட்கப்பட்டு இருந்தது. அதன்படி,
கேள்வித்தாளில், மீன் தொட்டியை,
ஒரு சிறுவன் பார்ப்பது போல், படம்
தரப்பட்டு இருந்தது.
புதுக்கோட்டை மற்றும்
அதை சுற்றியுள்ள சில மாவட்டங்களில்
வழங்கப்பட்ட கேள்வித்தாளில், படம்
சரியாக, 'பிரின்ட்' ஆகாமல், கறுப்பாக
இருந்துள்ளது. இதனால், படத்தை பார்க்க
முடியாமல், மாணவர்கள் அவதிப்பட்டதாக,
புதுக்கோட்டையைச் சேர்ந்த
ஆசிரியர்கள் சிலர் தெரிவித்தனர். படக்
குழப்பத்தால், விடை அளிக்க முடியாமல்
அவதிப்பட்ட மாணவர்களுக்கு,
ஐந்து மதிப்பெண் வழங்க வேண்டும்
என்பது எதிர்பார்ப்பாக உள்ளது.
நேற்றைய தேர்வு, மிகவும் எளிதாக
இருந்ததாக, சென்னை மாணவர்கள்
தெரிவித்தனர். இதனால், 'பிட்'
அடித்ததாக, வெறும், ஐந்து பேர்
மட்டுமே, தேர்வு அதிகாரிகளிடம்
சிக்கினர்.

No comments:

Post a Comment