Saturday, April 05, 2014

சிறப்பு டி.இ.டி., தேர்வு தள்ளி வைப்பு

மாற்றுத்திறனாளிகளுக்கு, இம்மாதம், 28ம்
தேதி நடத்த இருந்த, சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வை (டி.இ.டி.,), லோக்சபா தேர்தல் காரணமாக, மே, 21ம் தேதிக்கு, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,),
தள்ளி வைத்துள்ளது.

'மாற்றுத்திறனாளிகள், ஆசிரியர்
வேலை வாய்ப்பை பெறும் வகையில்,
அவர்களுக்கு, சிறப்பு டி.இ.டி.,
தேர்வு நடத்தப்படும். இவர்களுக்கு, தமிழக
அரசே, தேர்வு குறித்து, 40 நாள் இலவச
பயிற்சி அளிக்கும்' என, முதல்வர்
ஜெயலலிதா அறிவித்தார். அதன்படி,
சிறப்பு டி.இ.டி., தேர்வு குறித்த அறிவிப்பை,
டி.ஆர்.பி., வெளியிட்டது. ஆசிரியர்
கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்,
மாநிலம் முழுவதும், மார்ச் முதல் வாரத்தில்
இருந்து, இலவச
பயிற்சியை அளித்து வருகிறது. வரும், 15ம்
தேதியுடன், பயிற்சி முடிகிறது. 700க்கும்
அதிகமான மாற்றுத்திறனாளிகள்,
பயிற்சியில் பங்கேற்று உள்ளனர்.
போட்டி தேர்வு, வரும், 28ம் தேதி நடக்க இருந்த
நிலையில், தேர்தல் காரணமாக, மே, 21ம்
தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. 32
மாவட்டங்களிலும், 40 மையங்களில்,
சிறப்பு தேர்வு நடக்கிறது.

No comments:

Post a Comment