Wednesday, April 30, 2014

அண்ணா பல்கலை. எம்சிஏ, எம்பிஏ படிப்புகளுக்கும் பொது கலந்தாய்வு: முதல்முறையாக இந்த ஆண்டு அறிமுகம்

அண்ணா பல்கலைக்கழகத்தின் எம்சிஏ, எம்பிஏ இடங்களும் இந்த ஆண்டு முதல்முறையாக பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.

அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரிகள்,
அரசு பொறியியல் கல்லூரிகள் மற்றும்
அரசு உதவி பெறும் கல்லூரிகளில் உள்ள பி.இ.,
பி.டெக். இடங்களும், தனியார் பொறியியல்
கல்லூரிகளில் இருந்து கிடைக்கும்
அரசு ஒதுக்கீட்டு இடங்களும்
பொது கலந்தாய்வு மூலம் ஒற்றைச் சாளர முறையில்
(சிங்கிள் விண்டோ சிஸ்டம்) நிரப்பப்படுகின்றன.
பொது கலந்தாய்வு
பொது கலந்தாய்வு முறையில் மாணவர்கள்
ஒவ்வொரு கல்லூரிக் கும்
தனித்தனியே விண்ணப்பிக்க தேவையில்லை.
ஒரு விண்ணப்பம் அனுப்பினால் போதும். கட் ஆப்
மார்க்
வைத்து தரவரிசைப்படி கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவார்
கள். அன்றைய நாளில் உள்ள கல்லூரிகளில்
தங்களுக்கு விருப்ப மான
கல்லூரியை தேர்வுசெய்து கொள்ளலாம்.
அண்ணா பல்கலை. எம்சிஏ, எம்பிஏ
இதேபோன்றுதான் “டான்செட்”
நுழைவுத்தேர்வு மதிப்பெண் மூலமாக அரசு மற்றும்
அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், கலை-
அறிவியல் கல்லூரிகள் மற்றும் தனியார்
சுயநிதி கல்லூரிகளில்
அரசு ஒதுக்கீட்டுக்கு கிடைக்கும் எம்இ., எம்டெக்.
எம்பிஏ, எம்சிஏ இடங்கள்
பொது கலந்தாய்வு மூலமாக
நிரப்பப்பட்டு வருகின்றன.
அண்ணா பல்கலைக்கழகத்தின் எம்இ, எம்டெக்
இடங்கள் பொது கலந்தாய்வு மூலமாக
நிரப்பப்பட்டா லும் அங்குள்ள எம்சிஏ, எம்பிஏ.
இடங்கள் மட்டும் கடந்த
ஆண்டு வரை அண்ணா பல்கலைக்கழகம் மூலமாக
தனியாக நிரப்பப்பட்டு வந்தன. இந்நிலையில்,
இந்த ஆண்டு முதல்முறையாக
அண்ணா பல்கலைக்கழகத்தின் எம்சிஏ, எம்பிஏ
இடங்களும் பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட
உள்ளதாக மாநில தொழில்நுட்ப கல்வி இயக்கக
அதிகாரிகள் தெரிவித்தனர்.
எத்தனை இடங்கள்?
“டான்செட்” மதிப்பெண் அடிப்படையில்
பொது கலந்தாய்வு மூலமாக எம்இ, எம்டெக்.
படிப்பு களில் ஏறத்தாழ 7,500 இடங்களும்,
எம்சிஏ படிப்பில் 2,200 இடங்களும் எம்பிஏ
படிப்பில் 3,500 இடங்களும்
நிரப்பப்படுகின்றன.
இந்த ஆண்டு இடங்களின்
எண்ணிக்கை சற்று மாறுபடலாம்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்சிஏ, எம்பிஏ
படிப்புகளில் எத்தனை இடங்கள்
பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளன
என்பது இன்னும் இறுதி செய்யப்படவில்லை.

No comments:

Post a Comment