Saturday, April 12, 2014

கல்வித்துறை அலுவலகங்களில் மாதந்தோறும் குறைதீர்வு கூட்டம்: ஆசிரியர்கள் கோரிக்கை

கல்வித்துறை அலுவலகங்களில் கோப்புகள் மீது நடவடிக்கை எடுக்க லஞ்சம் கேட்பதாக ஆசிரியர்கள் புகார் கூறுகின்றனர்.

ஆசிரியர்களின் குறைகளைப் போக்க
ஒவ்வொரு கல்வி அலுவலகத்திலும் மாவட்டந்
தோறும் குறைதீர்வு கூட்டம் நடத்த வேண்டும்
என்ற கோரிக்கையும் வைத்துள்ளனர்.
அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும்
பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள்,
ஊதிய உயர்வு நிலுவைத்தொகை, ஜி.பி.எப்.
முன்பணம், சிறப்பு நிலை,
தேர்வு நிலை ஊதிய உயர்வு, உயர்கல்வித்
தகுதிக்கான ஊக்க ஊதியம், ஈட்டிய விடுப்பு,
வீட்டுக்கடன், வாகன கடன், பாஸ்போர்ட் பெற
தடையின்மை சான்று (என்.ஓ.சி.)
போன்றவற்றைப் பெற தங்கள் பள்ளித்
தலைமை ஆசிரியர் மூலம்
விண்ணப்பிப்பது வழக்கம்.
இவ்வாறு கல்வித்துறை அலுவலகங்களுக்கு
அனுப்பப் படும் கோப்புகள், மாதக்கணக்கில்
தேங்கி விடுவதாக ஆசிரியர்கள் புகார்
கூறுகின்றனர். பணம் கொடுத் தால்
உடனடியாக வேலை நடப்பதாகவும்
ஒவ்வொரு கோப்புக் கும்
ஒரு தொகை வசூலிக்கப்படு வதாகவும்
கூறுகின்றனர். மாவட்டத்தொடக்கக்
கல்வி அலுவலகங்கள், உதவி தொடக்கக்
கல்வி அலுவலகங்களில் ‘கவனித் தால்’தான்
வேலையே நடக்கிறது என்று தொடக்கப் பள்ளி,
நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் குற்றம்
சாட்டுகின்றனர்.
இதுகுறித்து தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி
முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் கழக மாநில
தலைவர் வே.மணிவாசகன் கூறுகையில்,
“ஆசிரியர்களின் குறைகளைப் போக்க
ஒவ்வொரு கல்வி அலுவலகத்திலும் மாவட்டந்
தோறும் குறைதீர்வு கூட்டம் நடத்த வேண்டும்
என்று பள்ளிக்கல்வி முன்னாள் இயக்குநர்
தேவராஜன் உத்தரவு பிறப்பித்தார்.
அந்த உத்தரவு நடைமுறைப்படுத்
தப்படாமலே உள்ளது. மாதந்தோறும் ஆசிரியர்
குறைதீர்வு கூட்டம் நடத்தப்பட்டால், இதுபோன்ற
பிரச்சினைகள் ஓரளவு முடிவுக்கு வரும்’’
என்றார்.

No comments:

Post a Comment