Tuesday, April 01, 2014

விடுதி மாணவருக்கு போட்டி தேர்வுக்கு பயிற்சி நடத்தப்படுமா?

"அரசு விடுதிகளில், தங்கி பயிலும்
மாணவர்களை, போட்டித்தேர்வுகளுக்கு தயார்படுத்தும் விதமாக, சிறப்பு வகுப்புகளை ஏற்பாடு செய்ய
வேண்டும்' என, கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழகத்தில்,
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்,
பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும்
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கீழ்,
மாணவர்கள் தங்கும் விடுதிகள்
செயல்படுகின்றன; இவற்றில்,
ஆயிரக்கணக்கான மாணவர்கள்
தங்கி உள்ளனர்.
மாணவர்களின் எதிர்காலம் பாதிப்பு :
பெரும்பாலான விடுதி மாணவர்களால்,
படித்து முடித்தவுடன், போட்டித்
தேர்வுகள், வேலைகளுக்கான
நேர்காணலில் சிறப்பாக செயல்பட
முடிவதில்லை. இதனால், அவர்களின்
எதிர்காலம், பாதிக்கப்படுகிறது. எனவே,
விடுதிகளில் தங்கியுள்ள,
கல்லூரி மாணவர்களுக்கு, போட்டித்
தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள்
நடத்த வேண்டும் என, அவர்கள்
தரப்பிலிருந்து கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து, நலத்துறை அதிகாரிகள்
கூறியதாவது:
இப்பிரச்னையை தவிர்ப்பதற்காகவே, நல
விடுதிகளில் ஆங்கில பயிற்சி முகாம்
நடத்தப்படுகிறது. இதன் மூலம்,
ஓரளவுக்கு ஆங்கிலத்தில் பேசவும்,
எழுதவும் கற்றுக் கொடுக்கப்படுகிறது.
மேலும்,
போட்டி தேர்வுகளுக்கு தயாராக
தேவைய ான பல நூல்கள் விடுதிகளில்
உள்ளன. அதில், சந்தேகம் இருந்தால்,
விடுதி காப்பாளரிடம் கேட்டு,
சந்தேகத்தை பூர்த்தி செய்ய,
உத்தரவிடப்பட்டுள்ளது. இது,
மாணவர்களின் பயத்தை போக்கி,
போட்டித்தேர்வுகளுக்கு,
தயார்படுத்தும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
அதிகாரிகள் இவ்வாறு கூறினாலும்,
நூலகங்களில் போட்டித்
தேர்வுகளுக்கு தயார்படுத்தும்,
நூல்கள் இருப்பதில்லை.
அவ்வாறு இருந்தாலும்,
விடுதி மாணவர்கள், எளிதில்
பயன்படுத்த
முடியாத இடத்தில் உள்ளன. மேலும்,
பெரும்பாலான நேரங்களில்,
விடுதி காப்பாளரை காண்பதே அரிது எனவும்
கூறப்படுகிறது. எனவே,
சிறப்பு பயிற்சி வகுப்பு அளித்தால்
மட்டுமே, மாணவர்களின் எதிர்காலம்,
சிறப்பாக அமையும் என, மாணவர்கள்
தரப்பில் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment