Friday, May 23, 2014

விருதுநகர்: 10ம்வகுப்பு தேர்வில் 164 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி

தமிழகத்தில் இன்று 10–ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில், விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த சத்திரிய பெண்கள் பள்ளி மாணவி ரத்னாமணி.
இவர் ஆங்கிலத்தில் 99 மதிப்பெண்களும் மற்ற அனைத்து பாடங்களிலம் 100 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். மொத்த மதிப்பெண்கள் 499 ஆகும். இவரது தந்தை பெயர் ராம்தாஸ், தாய் நாகராணி. இவருக்கு ஸ்ரீதர், ஸ்ரீபிரேம் என்ற இரு சகோதரர்கள் உள்ளனர். இவர் வருங்காலத்தில் விஞ்ஞானியாவேன் என்று கூறியுள்ளார்.
இதேபோல் சாத்தூர் ராதாகிருஷ்ணன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி ஷரோன் கரிஷ்மா ஆகியோர் 499 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளனர்.
இதேபோல் ராஜபாளையம் ரமண வித்தியாலயா பள்ளி மாணவி பிரியதர்ஷினி, சத்திரிய பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி சகானா ஆகியோர் 498 மதிப்பெண்கள் பெற்று 2–ம் இடம் எடுத்துள்ளனர்.
மாவட்டத்தில் 26 பேர் 497 மதிப்பெண்கள் பெற்று 3–ம் இடம் பிடித்துள்ளனர். இதில் நோபிள் மெட்ரிக் பள்ளி மாணவ–மாணவிகள் ரூபிகா, கீதா பிரியா, முகமது சொகைல் ஆகியோர் 497 மதிப்பெண்கள் பெற்று 3–ம் இடம் பெற்றுள்ளனர்.
இதே பள்ளியை சேர்ந்த மாணவ–மாணவிகள் காயத்திரி, கீதாஞ்சலி, சர்மிளா கோமதி, அப்சல் அகமது, இன்சான்ட் விசாந்த், ஜெரோன் தமிழினியன், நவீன் பிரசன்னா, பிரசாந்த் குமார், சஞ்சய் பிரசாத் ஆகிய 8 பேர் ஆங்கில பாடத்தில் 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.
மாவட்டத்தின் மொத்த தேர்ச்சி சதவீதம் 96.5 ஆகும். இதில் மாணவர்கள் 94.86 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 98.29 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் மாநில அளவில் தேர்ச்சி விகிதத்தில் 4–வது இடத்தை பெற்றுள்ளது

No comments:

Post a Comment