Saturday, May 31, 2014

10 ஆயிரம் தனியார் பள்ளிகளின் கட்டண விவரங்கள் வெளியீடு

புதிய பள்ளிகள், மேல்முறையீடு செய்த
பள்ளிகள் உள்பட 10055 தனியார்
பள்ளிகளுக்கான கட்டண நிர்ணய விவரங்கள் தமிழக அரசின் www.tn.gov.in என்ற இணையதளத்தில் வியாழக்கிழமை வெளியிடப்பட்டன.

நீதிபதி எஸ்.சிங்காரவேலு குழு, 10
ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார்
பள்ளிகளுக்கு கடந்த ஆண்டு கட்டணம்
நிர்ணயம் செய்தது. 2013-14, 2014-15, 2015-16
ஆகிய மூன்று கல்வியாண்டுகளுக்கும்
சேர்த்து இந்தக் கட்டணங்கள்
நிர்ணயிக்கப்பட்டன.
இந்தக் கட்டண
நிர்ணயத்தை எதிர்த்து நூற்றுக்கணக்கான
தனியார் பள்ளிகள்
நீதிபதி சிங்காரவேலு குழுவிடம்
மேல்முறையீடு செய்தன. அதே போல், பல
தனியார் பள்ளிகள் நீதிமன்றத்திலும்
வழக்குகளைத் தொடர்ந்தன.
இந்தப் பள்ளிகளுக்கும் புதிதாகத்
தொடங்கப்பட்ட பள்ளிகளுக்கும் கட்டணம்
நிர்ணயிக்கும் பணிகள் நடைபெற்று வந்தன.
இந்தப் பணிகள்
நிறைவடைந்ததையடுத்து இப்போது தமிழக
அரசின் இணையதளத்தில் கட்டண நிர்ணய
விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இது தொடர்பாக கட்டண நிர்ணயக்
குழு வட்டாரங்கள் கூறியது:
மேல்முறையீடு செய்த பள்ளிகள் மற்றும்
நீதிமன்றம் சென்ற பள்ளிகள், புதிய பள்ளிகள்
ஆகியவற்றின் எண்ணிக்கை குறைவுதான்.
இந்தப் பள்ளிகளுக்கான புதிய கட்டண
நிர்ணயத்தோடு, ஏற்கெனவே கட்டணம்
நிர்ணயிக்கப்பட்ட பள்ளிகளின் கட்டண
விவரங்களும் சேர்த்து இணையதளத்தில்
வெளியிடப்பட்டுள்ளன.
பள்ளிகள் திறப்பதற்கு முன்பாக அந்தந்த
தனியார் பள்ளிகள் தங்களது கட்டண
நிர்ணயத்தை வெளியிட வேண்டும்.
அவ்வாறு பள்ளிகள்
வெளியிடவில்லையென்றாலும், அந்தப்
பள்ளிகளின் கட்டண விவரங்களைப்
பெற்றோர்கள் இணையதளத்தின் மூலமாக
அறிந்துகொள்ளலாம்.
5 பள்ளிகள் மீது நடவடிக்கை:
நிர்ணயிக்கப்பட்டதை விட அதிகமாக கட்டணம்
வசூலித்ததாக 5 பள்ளிகளின் மீது புகார்கள்
வந்தன. இந்தப் பள்ளிகளின்
மீது நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட
இயக்குநர்களுக்கு கட்டண நிர்ணயக்
குழு பரிந்துரையை அனுப்பியுள்ளது.
அதே போல் கட்டண நிர்ணயக் குழு சார்பில்
பள்ளிகளில் வசூலிக்கப்படும் கட்டண
விவரங்களை
தானாகவே முன்வந்து ஆய்வு செய்யும்
வகையில், குழுவில் கண்காணிப்புப்
பிரிவு ஏற்படுத்த
அனுமதி கோரி அரசுக்கு பரிந்துரையும்
அனுப்பப்பட்டுள்ளது. இப்போதைய நிலையில்
குழுவுக்கு அதிகக் கட்டண வசூல் தொடர்பாக
புகார்கள் வந்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்க
முடியும் என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment