Saturday, May 03, 2014

கால்நடை மருத்துவப் படிப்புக்கு மே 12 முதல் விண்ணப்பம்: ஜூன் 3- வது வாரத்தில் ரேங்க் பட்டியல்

கால்ந டை மருத்துவப் படிப்பில்
சேருவதற்கு மே 12 முதல்
விண்ணப்பங்கள் வழங்கப்படும்
என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக
தமிழ்நாடு கால்நடை மருத்துவ
அறிவியல் பல்கலைக்கழக
இளநிலை பட்டப்
படிப்பு தேர்வுக்குழு தலைவர்
எம்.திருநாவுக்கரசு வெளியிட்டுள்ள
செய்திக்குறிப்பில் கூறியிருப்
பதாவது:-
கால்நடை மருத்துவம்,
உணவு தொழில்நுட்பம்,
கோழியின
உற்பத்தி தொழில்நுட்பம் ஆகிய
பாடப்பிரிவுகளில் 2014-2015-ம்
ஆண்டு இளநிலை பட்டப்
படிப்பு மாணவர் சேர்க்கை தொடர்
பான அறிவிப்பு மே 11-ம்
தேதி வெளி யிடப்படும்.
விண்ணப்ப படிவங்கள் மே 12 முதல்
30-ம் தேதி வரை வழங்கப்படும்.
கிடைக்கும் இடங்கள்
சென்னை மாதவரத்தில் உள்ள
கால்நடை மருத்துவ பல்கலைக்
கழகம் மற்றும் சென்னை வேப்பேரி,
நாமக்கல், நெல்லை,
ஈரோடு கால்நடை மருத்துவ
கல்லூரிகளிலும்,
சென்னை தாம்பரத்தை அடுத்த
காட்டாங் கொளத்தூர், மதுரை,
கோவை, திருச்சி, விழுப்புரம்,
வேலூர், தருமபுரி ஆகிய
இடங்களில் உள்ள பல்கலைக்கழக
பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையங்
களிலும், நாமக்கல்
கால்நடை மருத்துவமனை சிகிச்சைத்
துறையிலும், ஓசூர்
மத்திகிரி கோழியின அறிவியல்
மேலாண்மை நிலையத்திலும்
விண்ணப்பங்கள் கிடைக்கும்.
கட்டணம்
விண்ணப்ப கட்டணம் ரூ.600.
எஸ்சி,எஸ்டி வகுப்பினருக்கு ரூ.300
மட்டும். விண்ணப்ப
கட்டணத்தை யூனியன் பேங்க் ஆப்
இந்தியா செலான் மூலமாக
செலுத்த வேண்டும்.
ஒரத்தநாடு கால்நடை மருத்துவக்
கல்லூரி யில் மட்டும்
கட்டணத்தை ரொக்க மாக கட்டலாம்.
விண்ணப்பித்த மாணவர்களின்
ரேங்க் பட்டியல் ஜூன் 3-
வது வாரத்தில் பல்கலைக் கழக
இணையதளத்தில் (www.tanuvas.ac.in)
வெளியிடப்படும்.
இதைத்தொடர்ந்து கலந்தாய்வு நடைபெறும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment