Thursday, May 08, 2014

ஆசிரியர் தகுதித் தேர்வில் தாள் 2-ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்க்கும் பணி துவக்கம் 12-ம் தேதி வரை நடக்கிறது

திருச்சி வாசவி வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் தகுதித்தேர்வில் தாள் 2ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கான
சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணி நேற்று துவங்கியது.

தமிழ்நாடு ஆசிரியர்
தேர்வு வாரியத்தால் கடந்த
ஆண்டு ஆசிரியர் தகுதித்
தேர்வு நடத்தப்பட்டது.
திருச்சி மாவட்டத்தில் இத்தேர்வில்
அரசு அறிவித்துள்ள
தளர்வு மதிப்பெண் பெற்று தாள் 2ல்
தேர்ச்சி பெற்றுள்ள 1,200
பேருக்கு சான்ற ிதழ்
சரிபார்ப்பு பணி திருச்சி வாசவி
வித்யாலாயா பள்ளி வளாகத்தில்
நேற்று துவங்கியது. சான்றிதழ்
சரிபார்ப்பு பணி முதன்மை கல்வி
அலுவலர் செல்வகுமார்
தலைமையில் நடைபெற்றது. முதல்
நாளான நேற்று 225 பேர்
கலந்து கொண்டனர், அவர்களின்
சான்றிதழ்களை அலுவலர்கள்
சரிபார்த்தனர். வரும் 12ம்
தேதி வரை சான்றிதழ்
சரிபார்ப்பு பணி நடைபெறவுள்ளது.
அவரவருக்கு அழைப்பு கடிதத்தில்
குறிப்பிட்டுள்ள தேதியில்
காலை 9.30
மணிக்கு வாசவி வித்யாலயா பள்ளி
வளாகத்திற்கு வர வேண்டும்.
அழைப்பு கடிதம் பெற இயலாதவர்கள்
உரிய ஆவணங்களுடன் மாவட்ட
முதன்மை கல்வி அலுவலரை நேரில்
தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட
முதன்மை கல்வி அலுவலர்
செல்வகுமார் விடுத்துள்ள
செய்திக்குறிப்பில்
தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment