Friday, May 09, 2014

பிளஸ் 2: இயற்பியலில் 2,710 மாணவர்கள் சதமடித்து சாதனை!

பிளஸ் 2 இயற்பியல் படத்தில் 2,710 மாணவர்கள் சதமடித்து சாதனை படைத்துள்ளனர். இப்பாடத்தில் கடந்த ஆண்டு வெறும் 36 பேர் மட்டுமே 100% மதிப்பெண்கள் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று (வெள்ளிக்கிழமை) காலை வெளியிடப்பட்டது. இதில், வேதியியல் பாடத்தில் 1,693 பேர் 100 சதவீதம் மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளனர். கணிதப் பாடத்தில் 3,882 மாணவர்கள் 100 சதவீதம் மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளனர்.
உயிரியலில் 652 மாணவர்கள் 200-க்கு 200 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டை (682 பேர்) விடவும் சற்றே அதிகமான எண்ணிக்கையாகும்.
தாவரவியலில் 15 பேரும், விலங்கியலில் 7 பேரும் 100% மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளனர். விலங்கியலில் கடந்த ஆண்டு எவரும் 100 சதவீதம் மதிப்பெண்கள் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கணினிப் பாடத்தில் கடந்த ஆண்டை விடவும் குறைவான மாணவர்களே 100% மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 1,469 மாணவர்களை எடுத்த நிலையில், இந்த ஆண்டு 993 மாணவர்கள் 100% எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளனர்.
வணிகவியல் பாடத்தில் 2,587 மாணவர்களும், கணக்குப் பதிவியல் பாடத்தில் 2,403 மாணவர்களும் 100% மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளனர்.
வணிக கணிதத்தில் பாடத்தில் 605 மாணவர்கள் 100 சதவீதம் மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சிப்பெற்றுள்ளனர்.

No comments:

Post a Comment