Friday, May 23, 2014

21 போலி பல்கலைகள்யு.ஜி.சி., பட்டியல் வெளியீடு

தமிழகத்தில் உள்ள, ஒரு பல்கலை உட்பட,
நாடு முழுவதும், 21 போலி பல்கலைகளின்
பட்டியலை, பல்கலை மானியக்
குழு - யு.ஜி.சி., வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள
கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளுக்கான
அங்கீகாரம் வழங்குதல், அவற்றிற்கான
மானியத் தொகைகளை அளித்தல்
உள்ளிட்ட பல்வேறு பணிகளை,
பல்கலை மானியக்
குழு செய்து வருகிறது.பல்கலை மானியக்
குழுவின் கீழ் செயல்படும், 'நாக்'
அமைப்பு, பல்கலைகள் மற்றும்
கல்லுாரிகளில் கட்டமைப்பு வசதிகள்,
பாடத்திட்டம், ஆசிரியர்கள் உள்ளிட்ட
விஷயங்களை ஆய்வு செய்து,
சிறப்பு அந்தஸ்தை வழங்கி வருகிறது.
இவ்வாறு, அங்கீகாரம் மற்றும்
அந்தஸ்து வழங்கப்பட்டாலும், சில
கல்லுாரிகள், பல்கலைகள், எவ்வித
அங்கீகாரமும் பெறாமல், உரிய
கட்டமைப்பு ஒன்றும் இன்றி, போலியாக
செயல்பட்டு, மாணவர்கள்
சேர்க்கையை நடத்தி,
அவர்களை ஏமாற்றுகின்றன.
இவ்வாறாக செயல்பட்டு வரும்,
பல்கலைகள் பட்டியலை, யு.ஜி.சி.,
வெளியிட்டுள்ளது. இதில், தமிழகத்தில்,
ஒரு பல்கலை உட்பட, நாடு முழுவதும், 21
பல்கலைகள் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
தமிழகத்தில், திருச்சி, புத்துாரில்
உள்ள டி.டி., சமஸ்கிருத பல்கலை,
இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளது, பீகார்,
கர்நாடகா, கேரளா, மத்திய பிரதேசம்,
மகாராஷ்டிரா, மேற்கு வங்கம்
ஆகியவற்றில்,
தலா ஒரு பல்கலை போலியானது என்பது கண்டறியப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக, டில்லியில், ஐந்து மற்றும்
உத்தர பிரதேசத்தில், ஒன்பது பல்கலைகள்
இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளன. இதில்,
தமிழகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும்,
டி.டி., சமஸ்கிருத பல்கலையானது, கடந்த
சில ஆண்டுகளாகவே,
போலி பல்கலைகள் பட்டியலில் இடம்
பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.மேலும்,
அப்பகுதியில் இதுபோன்ற பல்கலை, பல
ஆண்டுகளுக்கு முன் இருந்தது,
தற்போது மூடப்பட்டு விட்டதாகவும்
கூறப்படுகிறது.-

No comments:

Post a Comment