Friday, May 09, 2014

பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியீடு: கிருஷ்ணகிரி மாணவி முதலிடம்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வு முடிவு காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டது.
சென்னை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ. வளாகத்தில் அரசு தேர்வுத்துறை இயக்குநர் கு.தேவராஜன் தேர்வு முடிவு மற்றும் ரேங்க் பட்டியலை வெளியிட்டார்.

இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் 87.4% மாணவிகளும், 93.4% மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்த தேர்ச்சி விகிதம் 90.6%ஆகும். வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகள் தேர்ச்சி விகிதம் அதிகமாக உள்ளது.
மாநில அளவில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஸ்ரீவித்யா மந்திர் பள்ளியைச் சேர்ந்த மாணவி சுசாந்தி 1,193 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ளார்.
1200-க்கு 1192 மதிப்பெண்கள் பெற்று தர்மபுரி ஸ்ரீவித்யா மந்திர் பள்ளியைச் சேர்ந்த மாணவி அலமேலு மாநிலத்தில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.
மூன்றாவது இடத்தை நாமக்கல் கிரீன் பார்க் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர் துளசிராஜன் 1191 மதிப்பெண்கள் பெற்று பிடித்தார். மூன்றாவது இடத்தை மடிப்பாக்கம் பிரின்ஸ் பள்ளியைச் சேர்ந்த மாணவி நித்யாவும் 1191 மதிப்பெண்கள் பெற்று பகிர்ந்து கொண்டுள்ளார்.
4,94,100 மாணவர்கள் 60%-க்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர்.

No comments:

Post a Comment